Petrol price hike: இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல்  விலையினால், பண வீக்கத்தில் மாற்றம் வருமா என்று சொல்வது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2021, 08:39 PM IST
  • இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால், பண வீக்கத்தில் மாற்றம் வருமா என்று சொல்வது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • அமெரிக்க நிறுவனமான எரிசக்தி தகவல் நிர்வாகம், கடந்த வாரத்தில் 2.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
Petrol price hike: இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை title=

கடந்த நான்கு வாரங்களாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சரக்கு இருப்பு அதிகரித்ததன் காரணமாக, எண்ணெய் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது அமர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை குறைந்தது. மறுபுறம், உள்நாட்டில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தொடர்ந்து 19 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றவில்லை. அதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல்  (Petrol And Diesel) விலையினால், பண வீக்கத்தில் மாற்றம் வருமா என்று சொல்வது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டால், பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும், இதனால் நுகர்வோர் நிச்சயமாக பணத்தை சிறிது மிச்சம் பிடிக்க முடியும் எனக் கூறலாம்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு ரூ.91.17, ரூ.91.35, ரூ 97.57 மற்றும் ரூ.93.11 என்ற அளவில் விற்கப்படுவதாக இந்தியன் ஆயில் வலைத்தளம் (IOC) தெரிவித்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.81.47, ரூ.84.35, ரூ.88.60 மற்றும் ரூ.86.45 என்ற அளவில் உள்ளது.

சர்வதேச எதிர்கால சந்தையில் இன்டர் கான்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் (ICI) ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் மே மாதம் விநியோகத்திற்கான ஒப்பந்தம் பீப்பாய் ஒன்றுக்கு 67.43 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது, இது வியாழக்கிழமை வர்த்தகல் செய்யப்பட்ட அளவை விட 0.84 சதவீதம் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், நியூயார்க் மெர்கன்டைல் ​​எக்ஸ்சேஞ்சில் (NYMEX) WTI ஏப்ரல் மாதத்திற்கான ஒப்பந்தம் பீப்பாய் ஒன்றுக்கு 63.08 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது, இது முந்தைய அமர்விலிருந்து 0.80 சதவீதம் குறைந்துள்ளது.

அமெரிக்காவில், அமெரிக்க நிறுவனமான எரிசக்தி தகவல் நிர்வாகம், கடந்த வாரத்தில்  2.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

ALSO READ | Airtel வழங்கும் அசத்தலான 4-IN-1 Family Plan, 500GB Data, Data Add on திட்டம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News