பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 Communications Limited, 2022-2023 நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் நிதி செலுத்தும் நிறுவனமான பேடிஎம், கடந்தாண்டை விட தற்போது 76 விழுகாடு அதிகமாக வருவாயை பெற்று அதன் சந்தை மதிப்பு ரூ. 1,914 ஆக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வரி, வட்டி ஆகியவற்றை பிடித்தம் செய்யாமல் மொத்த வருவாயாக (EBITDA) ஆண்டுக்கு ரூ. 259 கோடியாகவும் மேம்பட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த நிறுவனத்தின் பங்களிப்பு லாபம் (Contribution Profit), கடந்த ஆண்டுக்கு 223 சதவீதமும், கடந்த காலாண்டுக்கு 16 சதவீதமும் உயர்ந்து, ரூ. 843 கோடியாக உள்ளது. கடன் விநியோகம் போன்ற பெரும் பங்களிப்பு அளிக்கும் வணிகங்களின் பயனால், அந்த நிறுவனத்தின் வருவாய் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தவிர கடந்த காலண்டில் மறைமுக செலவினம் ரூ. 1001 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது அது ரூ. 1010 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் மாஸ் காட்டும் BSNL! அதிர்ந்து போன ஜியோ
இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், வணிக வருவாய் (Business Profit) கடந்த ஆண்டுக்கு 56 சதவீதமும், கடந்த காலாண்டுக்கு 9 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டிலும் இதே போன்று வருவாய் உயர்வு ஏற்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக அனைத்து வணிக செயல்பாடுகளும் வருவாயை குவிப்பதால் வருவாய் உயர்வு ஏற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேடிஎம் அதன் வர்த்தகம் மற்றும் கிளவுட் சேவைகள் மூலம் ரூ. 377 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கிடையில், அதன் நிதிச் சேவை வருவாய் ₹349 கோடியில், இப்போது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 18% ஆகும். இது, கடந்த நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் 8% ஆக இருந்தது.
பேடிஎம் அதன் கடன் விநியோக வணிகத்தைப் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டது. இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவை ரூ. 4,050 கோடியாக உள்ளது. (ஆண்டுக்கு 449 சதவீதமும் மற்றும் காலாண்டுக்கு 20 சதவீதமும் வளர்ச்சி), தனிநபர் கடன்கள் வழங்குதல்கள் ரூ. 2,055 கோடியாகவும் உள்ளது. (ஆண்டுக்கு 736 சதவீதம் மற்றும் காலாண்டுக்கு 53 சதவீதம் வளர்ச்சி). இதற்கிடையில், சாதனங்கள் சார்ந்த வணிகத்தின் வளர்ச்சியின் காரணமாக வணிகர்களுக்கு கடன் வழங்கல் ரூ.1,208 கோடியாக (ஆண்டுக்கு 342 சதவீதமும் மற்றும் காலாண்டுக்கு 46 சதவீதமும்) உள்ளது.
இதையும் படிக்க | பாதி விலையில் கிடைக்கும் அசத்தல் ஓப்போ ஸ்மார்ட்போன்: கலக்கும் பிளிப்கார்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ