மும்பை: ஹெல்த்கேர் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்பவர்களின் வணிகம் தொடர்பான கோட்பாடு மாறிவரும் காலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக மாறிவருகிறது. பருமனான மற்றும் அதிக எடை கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் லாபம் ஈட்டும் ஹெல்த்கேர் நிறுவனங்கள், சக்திவாய்ந்த புதிய எடை இழப்பு மருந்துகள் தங்கள் வணிகங்களை மேலும் ஊக்கப்படுத்தும் என கூறுகின்றன.
நோவோ நார்டிஸ்க் (NOVOb.CO) Wegovy மற்றும் அதுபோன்ற மருந்துகளின் செயல்திறன் காரணமாக உடல் பருமன் மருந்துகளுக்கான உலகளாவிய சந்தை ஒரு தசாப்தத்திற்குள் $100 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய முன்னறிவிப்புகள், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை சாதனங்களைத் தயாரிப்பவர்கள் முதல் அதிக எடையினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள், நீரிழிவு முதல் தூக்கத்தில் மூச்சுத்திணறல் வரையிலான உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நிறுவனங்கள் வரை பரவலான நிறுவனங்களில் விற்பனையை அதிகரித்துள்ளன.
இருப்பினும், அந்த நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் எடை குறைக்கும் மருந்துகளின் அதிக விலை, நீண்ட கால பயன்பாட்டில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் செலவுகளுக்கான காப்பீட்டுத் கவரேஜ் இல்லாமை ஆகியவை நீண்ட கால அடிப்படையில் சந்தையின் நிலையை குறைக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் படிக்க | NPS கணக்கில் யாரை நாமினி ஆக்கலாம்? நாமினிகளை புதுப்பிக்க லேட்டஸ்ட் அப்டேட்
எடை குறைக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் கேள்வி கேட்கும்போது மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. உண்மையில் மருந்து உற்பத்தியாளர்களின் பங்குகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் பங்குகள் கடந்த மூன்று மாதங்களில் 28% உயர்ந்துள்ளன. எலி லில்லி (LLY.N), விரைவில் அதன் சொந்த எடை இழப்பு மருந்து Mounjaro அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பாப்பில் 25% உயர்ந்து, அதன் சந்தை மதிப்பு $550 பில்லியன்அதிகமானது என்றால், iShares U.S. மருத்துவ சாதனங்கள் பரிமாற்ற-வர்த்தக நிதி கடந்த மூன்று மாதங்களில் 22%க்கும் அதிகமாக இழப்பை சந்தித்துள்ளது.
GLP-1 ரிசெப்டர் அகோனிஸ்ட்கள் என அழைக்கப்படும் ஊசி மூலம் எடை குறைக்க உதவும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன, ஆனால் விலை உயர்ந்தவை, மாதத்திற்கு $1,300 க்கும் அதிகமாக செலவாகும். GLP-1 பங்குகளின் விலை இதனால் சற்று பின்னடைவை சந்திக்கலாம். இந்த நிறுவனம், உச்சபட்ச லாபத்தை அடைய குறைந்தது ஒரு தசாப்தம் ஆகும் என்று உலகளாவிய முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
மருத்துவ தொழில்நுட்ப நிறுவனங்களை சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவும் குளுக்கோஸ் மானிட்டர் போன்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ள நிறுவனங்களின் பங்குகளுக்கு மிகப் பெரிய அளவில் லாபம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இருதய நோய்களைக் குறைக்கும் மருந்துகளின் பங்குகள் மற்றும் இதய சிகிச்சைக்கான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகளுக்கான மதிப்பும் குறையாது என்று அனுமானிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | NPS கணக்கில் யாரை நாமினி ஆக்கலாம்? நாமினிகளை புதுப்பிக்க லேட்டஸ்ட் அப்டேட்
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை போன்ற தீவிரமான எடை இழப்பு நடைமுறைகளின் தேவையை மருந்துகள் குறைக்கலாம் என்பதை சுட்டிக்காட்டும் முதலீட்டாளர்கள், மக்கள் மருந்துகளை முயற்சிப்பது, அவர்கள் பெறும் எடை இழப்பு மற்றும் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதன் அடிப்படையில் இயல்பானதாகத் தெரிகிறது,.
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துவது அல்லது அனைத்தையும் ஒன்றாகத் தவிர்ப்பது என பல்வேறு காரணிகள் முதலீட்டிற்கு முன் பார்க்கப்பட வேண்டியவை ஆகும். மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் மட்டுமே Wegovy போன்ற எடை இழப்பு மருந்தை ஒரு வருடத்திற்குப் பிறகும் எடுத்துக்கொள்கிறார்கள் என்று ஜூலை மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
எடை இழப்பு மருந்தை பலர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எடை-குறைப்பு மருந்துகளின் விலை மற்றும் அவற்றின் பயன்பாடு நோயாளிகளின் நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்துமா மற்றும் சுகாதார செலவினங்களைக் குறைக்குமா என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மை ஆகியவை காப்பீட்டுத் தொகையின் நீண்டகால விரிவாக்கத்தை கட்டுப்படுத்தும்.
கார்ப்பரேட் சுகாதாரத் திட்டங்களைப் பற்றிய நுண்ணறிவு, ஃபார்மா நிறுவனங்களில் முதலீடு செய்யும் மனோநிலையை உருவாக்குக்கிறது. 2024 இல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு தொடர்பாக மனோநிலை மாறப்போவதில்லை. காப்பீடு அணுகல் கடுமையாக பாதிக்கும் போக்கு என்பது 2025, 2026 இல் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
மேலும் படிக்க | Onion Price: பண்டிகை காலத்தில் வெங்காய விலை அதிரடியா உயருதே! கவலையை தீர்க்கும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ