TATA INVEST: டாடா மோட்டார்ஸ் போர்டு, ஆட்டோமேக்கரை இரண்டு தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக பிரிக்கும் திட்டத்திற்கு இன்று (பிப்ரவரி 2024 திங்கள்கிழமை) ஒப்புதல் அளித்தது. வணிக வாகன வணிகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய முதலீடுகள் ஒரு பிரிவாகவும், PV, EV, JLR மற்றும் அதனுடன் தொடர்புடைய முதலீடுகள் உள்ளிட்ட பயணிகள் வாகன வணிகங்கள் மற்றொரு நிறுவனமாகவும் செயல்படும்.
நிறுவனங்கள் பிரிப்பு
நிறுவனங்களை பிரிப்பதற்கான NCLT திட்டம், வரும் மாதங்களில் குழுவின் ஒப்புதலுக்காக வைக்கப்படும் என்பதும், தேவையான அனைத்து பங்குதாரர், கடன் வழங்குபவர் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த நடைமுறைகள் முடிவடைய இன்னும் 12 முதல் 15 மாதங்கள் ஆகலாம்.
TATA MOTORS: CO PROPOSED DEMERGER OF TATA MOTORS LTD ( COMPANY) INTO TWO SEPARATE LISTED COMPANIES
TATA MOTORS: CO TO DEMERGE ITS BUSINESSES INTO TWO SEPARATE LISTED COMPANIES || COMMERCIAL VEHICLES BUSINESS AND ITS RELATED INVESTMENTS IN ONE ENTITY || PASSENGER VEHICLES…
— RedboxGlobal India (@REDBOXINDIA) March 4, 2024
நிறுவனம் இரண்டாக பிரிக்கப்படும் செயல்முறையால், நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளிகள் மீது எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என டாடா மோட்டார்ஸ் விளக்கம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் PV, EV மற்றும் JLR இன் மதிப்பு 715 ரூபாய் என்ற அளவிலும், CV மதிப்பீடுகள் 315 ரூபாயாகவும் உள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால், டாடா மோட்டார்ஸ் பங்குகள் ரூ.1,500/ரூ.2,000 அளவை அடையும் வரை அவற்றை வாங்கி வைத்திருப்பது கணிசமான லாபத்தைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச்சில் மெகா அறிவிப்பு: வங்கிக்கணக்கில் பம்பர் வரவு
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52% என்ற அளவிலான லாபத்தை அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பங்கு கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு கணிசமாக லாபத்தைக் கொடுத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டிசிஎஸ், டாடா டெக்னாலஜி உள்ளிட்ட பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபம் கொடுத்ததுபோலவே, டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பங்கும் அமோக லாபத்தை கொடுத்துள்ளது.
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பங்குகள் இன்று மட்டும் 5 சதவீதம் அதிகரித்தது. இந்த பங்கு கடந்த 5 நாட்களில் 18.10% மற்றும் 6 மாதங்களில் 242.62% வருமானம் அளித்துள்ளது என்பதும், கடந்த ஓராண்டில் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பங்கு 315.68 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999 ஜனவரி 6ம் தேதியன்று 72 ரூபாய் இருந்த பங்கு விலை, இன்று 8,428 ரூபாயை எட்டியுள்ளது. அதாவது, தற்போது 11,498.18% லாபத்தை கொடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ