ரிலையன்ஸ் Jio Fiber vs Airtel Xstream: வரம்பற்ற தரவைக் கொண்ட சிறந்த திட்டம் எது?

இரண்டு நிறுவனங்களும் வரம்பற்ற தரவுத் திட்டங்களை அறிவித்துள்ளதால், வீட்டிலிருந்து வேலை (Work From Home) பார்ப்பவர்கள், ஆன்லைன் வகுப்பு (Online Class) மற்றும் தரவுகளை அதிக அளவில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2020, 11:22 AM IST
  • இரண்டு நிறுவனங்களும் வரம்பற்ற தரவுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
  • ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை பிராட்பேண்ட் திட்டங்களுடன் வரம்பற்ற அழைப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளன.
  • நெட்ஃபிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் என 11 ஓடிடி இலவசம்
ரிலையன்ஸ் Jio Fiber vs Airtel Xstream: வரம்பற்ற தரவைக் கொண்ட சிறந்த திட்டம் எது? title=

Reliance Jio Fiber Vs Airtel Xstream: ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சமீபத்தில் தனது பிராட்பேண்ட் திட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது, இப்போது ஜியோ ஃபைபரின் (Jio Fiber Plans) அனைத்து திட்டங்களும் வரம்பற்ற தரவுகளுடன் வருகின்றன. ஜியோவுடன் போட்டியிடுவதற்காக, ஏர்டெல் தனது எக்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Plans) பிராட்பேண்ட் திட்டத்திலிருந்து FUP வரம்பையும் நீக்கியுள்ளது மற்றும் அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற தரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களும் வரம்பற்ற தரவுத் திட்டங்களை அறிவித்துள்ளதால், வீட்டிலிருந்து வேலை (Work From Home) பார்ப்பவர்கள், ஆன்லைன் வகுப்பு (Online Class) மற்றும் தரவுகளை அதிக அளவில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவார்கள். தரவு தீர்ந்து போவதைப் பற்றி கவலைப்படாமல் பயனர்கள் இப்போது வரம்பற்ற தரவைப் (Unlimited Data Plan) பயன்படுத்த முடியும். புதிய பிராட்பேண்ட் இணைய இணைப்பைப் பெற நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், சிறந்த வரம்பற்ற இணையத் திட்டங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்..!!

ALSO READ |  உங்கள் ஏரியாவில் Jio Fiber கிடைப்பதை எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்!!

ஜியோ ஃபைபர் விலை ஏர்டெல் ஃபைபர்  விலை
30Mbps ரூ. 399 40Mbps ரூ. 499
100Mbps ரூ. 699 100Mbps ரூ. 799
150Mbps ரூ. 999 200Mbps ரூ. 999
300Mbps ரூ.1,499    
500Mbps ரூ. 2,499 300Mbps ரூ. 1,499
1Gbps ரூ. 3,999 1Gbps ரூ. 3,999

வரம்பற்ற தரவைத் தவிர, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை பிராட்பேண்ட் திட்டங்களுடன் வரம்பற்ற அழைப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களை வரம்பற்ற குரல் அழைப்புடன் அறிமுகப்படுத்திய உள்ளது, இதை ஒரு மாதத்திற்கு இலவசமாக முயற்சி செய்யலாம். ஜியோ ஃபைபர் திட்டங்கள் ரூ .999 இல் OTT சந்தாவுடன் தொடங்குகின்றன.

ALSO READ |  Jio vs Airtel vs Vodafone திட்டங்களின் முழுமையான பட்டியல்!! எது சிறந்தது அறிந்து கொள்ளுங்கள்

ஜியோவின் ரூ. 999 திட்டத்தில் 11 ஓடிடி (OTT) இயங்குதள சந்தா இலவசம். பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜியோசினெமா போன்றவை இதில் அடங்கும். இந்த நிறுவனத்தின் ரூ. 1,499 திட்டம் 12 OTT இயங்குதளங்களுக்கு இலவச அணுகலுடன் வருகிறது. இதில் நெட்ஃபிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவை அடங்கும்.

எக்ஸ்ட்ரீம் 4 இன் ஆண்ட்ராய்டு பெட்டியை அதன் அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாகவும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இது தவிர, நிறுவனம் வரம்பற்ற குரல் அழைப்பாக இருக்கக்கூடிய லேண்ட்லைன்களையும் வழங்குகிறது. பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney + Hotstar) மற்றும் ZEE5 ஆகியவற்றின் சந்தாதாரர்களுக்கு ரூ. 999 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை எடுக்கும் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

Trending News