புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேஸ்புக் இன்க், கூகிள் மற்றும் ஃபிண்டெக் நிறுவனமான இன்ஃபீபீம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய டிஜிட்டல் கட்டண வலையமைப்பை அமைக்கவுள்ளதாக ஊடக செய்திகள் சனிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு, இந்தியாவின் மத்திய வங்கி புதிய அமைப்பு நிறுவனங்களை (NUE-கள்) உருவாக்குமாறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் ஒரு கட்டண வலையமைப்பை உருவாக்கி, இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சிலால் (NPCI) இயக்கப்படும் அமைப்புக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்க திட்டம் உருவாகியது.
2008 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட NPCI ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது மார்ச் 2019 நிலவரப்படி டஜன் கணக்கான வங்கிகளை அதன் பங்குதாரர்களாக்கியுள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), Citibank மற்றும் HSBC ஆகியவை அடங்கும். இது வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்கள், ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் கட்டணங்கள் உள்ளிட்ட சேவைகளின் மூலம் தினமும் பில்லியன் கணக்கான டாலர்களின் பரிமாற்றங்களை செய்கிறது.
பெயரிடப்படாத மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவின் முன்னணி வணிக நாளேடான எகனாமிக் டைம்ஸ், ரிலையன்ஸ் மற்றும் இன்ஃபீபீம் தலைமையிலான குழு தங்கள் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கியில் சமர்ப்பிக்கும் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாக கூறியது.
இன்ஃபீபீமின் செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த செயல்முறையின் இரகசியத்தன்மைக்கு நிறுவனம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ரிலையன்ஸ், கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இது குறித்த கேள்விகளுகக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
ALSO READ: SBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்
இந்தியாவில் டிஜிட்டல் கட்டணங்கள் 2023 ஆம் ஆண்டில் 135.2 பில்லியன் டாலராக உயரக்கூடும் என்று 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அசோசாம்-பிடபிள்யூசி இந்தியா ஆய்வு கூறுகிறது. பேஸ்புக் மற்றும் கூகிள் ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன. ஜியோ பிளாட்ஃபார்ம்களில் சொந்த பங்குகளை இவை வைத்திருக்கின்றன. இதில் ரிலையன்ஸ் மியூசிக், திரைப்பட செயலிகள் தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளன.
ரிசர்வ் வங்கி இந்த வாரம் அனைத்து தரப்பினரும் NUE விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 26-லிருந்து மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி இன்னும் ஆறு மாதங்களை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RBI இரண்டுக்கும் மேற்பட்ட இலாப நோக்குடைய புதிய NUE உரிமங்களை அளிக்காது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த கருத்துக் கோரியதற்கு ரிசர்வ் வங்கி பதிலளிக்கவில்லை.
முந்தைய ஊடக அறிக்கைகள், அமேசான் மற்றும் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான குழுக்களும் இதற்கான களத்தில் உள்ளன என்று கூறுகின்றன. நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான டாடா குழுமம் மற்றும் தனியார் கடன் வழங்குபனரான HDFC வங்கி தலைமையிலான மற்றொரு குழுவும் களத்தில் உள்ளது. இது தவிர, இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கட்டண தளமான Paytm, Ola மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவையும் ஒரு குழுவை உருவாக்கி இதற்கான முயற்சியை எடுக்கவுள்ளன.
ALSO READ: Bank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR