Reserve Bank of India Latest News: வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய முக்கியமான அப்டேட் கொடுத்திருக்கிறது. அது என்ன அப்டேட்? என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ள போகீறோம்.
வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பது என்பது பலருக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாகவே இருக்கிறது. அதுக்குறித்து பலருக்கு சரியான தெளிவு இல்லாதாதால், வங்கிகள் தொடர்ந்து மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் அபராதம் விதித்து கோடி கணக்கில் பணத்தை ஈட்டுகிறது. இதில் குறிப்பாக சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான தீர்வை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது.
நவம்பர் 1 முதல் ஆர்பிஐ புதிய ரூல்ஸ்
வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்க முடியாதா வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதத்தை வசூலிப்பது குறித்து ஆர்பிஐ புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் பைன்
நாம் நமது வங்கி கணக்கில் ஒரு 500 ரூபாய் இருப்பு வைத்திருக்கிறோம் என்றால், அடுத்த மாதம் போய் ஒரு எமர்ஜென்சிக்கு பணத்தை எடுக்கலாம் என நினைத்தால், வங்கியில் அந்த 500 ரூபாய் இருக்காது. அதைவிட குறைவாக இருக்கும் அல்லது மொத்தமாக 500 ரூபாயும் இருக்காது. இதற்கு காரணம் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் பைன் போட்டு, அந்த பணத்தை எடுத்திருப்பார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பணம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், உங்கள் வங்கி கணக்குக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால், அந்த 1000 ரூபாயில் இருந்து மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் பண்ணனும்னு சொல்லிட்டு 150 ரூபாய் அல்லது 200 ரூபாய் பிடித்தம் செய்து விடுகிறார்கள்.
வங்கி மினிமம் பேலன்ஸ் மெயிண்டைன்
இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அனுப்பிய பணத்தில், பெரும்பாலும் ஸ்டேட் பேங்க் இந்தியா, இந்தியன் பேங்க், கனரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உட்பட சில வங்கிகள் "மினிமம் பேலன்ஸ் மெயிண்டைன் பண்ணனும்னு" சொல்லிட்டு நிறைய பேருக்கு, 100 ரூபாய், 150 ரூபாய் என 200 ரூபாய் வரைக்கும் அபராதம் போட்டு தூக்கிட்டாங்க.
குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதம்
மறுபுறம் கலைஞர் உரிமைத்தொகை வந்திருக்குமே என வங்கியில் பேலன்ஸ் செக் பண்ணி பார்த்தபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வங்கியில், ரூ.850, 800 ரூபாய் தான் செலுத்தப்பட்டது எனவும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் செலுத்தப்படவில்லை என பலர் புகார் எழுந்தது. இறுதியாக கலைஞர் உரிமைத்தொகை பணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் கடைபிடிக்க வில்லை என அபராதம் போட்டு இருக்கோம் என வங்கிகள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண மக்கள் பாதிப்பு
மினிமம் பேலன்ஸ் என்ற ரூல்ஸ் பலருக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஒரு ரூபாய் 1000 பணத்தை அப்படியே வங்கியில் வைத்து விட்டு பல மாதங்கள் கழித்து, பின்பு எடுக்கச் சென்றாலும் முழுவதும் இருக்காது. வங்கி விதிகள் குறித்து விவரம் தெரிந்தவர்கள் மினிமம் பேலன்ஸ் அபராதம் போட்டு விட்டார்கள் என்று அறிந்துக்கொள்வார்கள். ஆனால் அதைப் பற்றி அறியாத சாதாரண மக்கள் அந்த பணம் எங்கு போய்விட்டது என்று நினைத்து கவலைப்படுகின்றன. இன்னும் சிலர் மாதக் கடைசியில் பணம் இல்லாமல், வங்கியில் இருக்கும் ஆயிரம் அல்லது 500 எடுக்க சென்றால் அப்போது அந்த பணம் பிடித்தமாக செய்யப்பட்டிருக்கும்.
வங்கி மினிமம் பேலன்ஸ் புதிய வீதி -ஆர்பிஐ
இப்படி பல பிரச்சனைகளை சந்திக்கும் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வீதியை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. மினிமம் பேலன்ஸ் புதிய விதி தொடர்பான விதிமுறைகளை அனைத்து வகைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அதுக்குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு பரிவரத்தனை செய்யாத வங்கி கணக்குகளுக்கு எந்தவிதமான அபராதமும் வசூலிக்கப்படக்கூடாது என ஆர்பிஐ கூறியுள்ளது.ஏனென்றால் அந்த வங்கி கணக்குகள் செயலற்ற கணக்குகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில் ஒரு வேலை கல்வி உதவித்தொகை, அரசு மானிய உதவித்தொகை பெறுவதற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளாக இருந்தால் அவற்றை செயலற்ற கடன்கள் ஆக கருதக்கூடாது. அந்த வங்கிக் கணக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றாலும், அவை செயலில் உள்ள கணக்குகள் ஆகவே கருதப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.
அதேபோல இந்த வங்கி கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளாக இருக்கும் பட்சத்தில், புதிய விதிமுறையின் படி எந்தவிதமான கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆர்பிஐ கூறியுள்ளனர்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்காமல் இருக்கும் கணக்குகள் குறித்து தகவலை, தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், கடிதங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
அரசு உதவித்தொகை பெறும் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் பணம் பிடிக்கக் கூடாது என ஆர்பிஐ ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
மேலும் படிக்க - இந்த தொகைக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூடாது! வரி விதிக்கப்படலாம்!
மேலும் படிக்க - ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டு வைத்து கொள்ள முடியும்? ஆர்பிஐ விதிகள்!
மேலும் படிக்க - UPI பயனர்களுக்கு RBI அளித்த தீபாவளி பரிசு: பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ