SBI Msme Sahaj: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கியாகும். இந்த எஸ்பிஐ வங்கியில் பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் உங்களிடம் எஸ்பிஐயில் கணக்கு இருந்தால் நீங்களும் இந்த புதிய திட்டத்தின் மூலம் பலனடையலாம். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இணைய அடிப்படையிலான டிஜிட்டல் வணிக கடன் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது MSME Sahaj எனப்படும் 'எண்ட் டு எண்ட் டிஜிட்டல் இன்வாய்ஸ் ஃபைனான்சிங்' என்ற திட்டமாகும். குறுகிய காலத்தில் சிறிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த புதிய திட்டத்தில் வெறும் 15 நிமிடங்களில் உங்களால கடன் தொகையை பெற முடியும். முறையான ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போது கடன் தொகை யாருடைய உதவியும் இல்லமால் நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.
எப்படி செயல்படுத்தப்படுகிறது?
இந்த புதிய திட்டம் தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடன் தொகை உரிய தேதியில் மற்றும் நேரத்தில் பயனாளர்களின் வங்கி கணக்கில் தானாகவே செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. முழுமையாக கணினி மயமாக்கப்பட்ட 'MSME Sahaj' ஐப் பயன்படுத்துவதன் மூலம், பயனாளர்கள் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட விற்பனை விலைப்பட்டியல் அடிப்படையில் வெறும் 15 நிமிடங்களுக்குள் ரூ. 1 லட்சம் வரை கடனாக பெற்று கொள்ள முடியும். சிறு தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி கொள்ள இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று எஸ்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
MSME Sahaj திட்டம் ஜிஎஸ்டியின் கீழ் வரும் சிறு தொழில்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எஸ்பிஐ வங்கியின் தகவலின்படி, தற்போது பயனாளர்கள் எஸ்பிஐயின் 'யோனோ' ஆப் மூலம் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சிறு தொழில் செய்பவர்கள் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிந்து கொண்டு இந்த திட்டத்தில் கடன் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா இந்த புதிய கடன் வழங்கும் திட்டத்தை பற்றி கூறுகையில், எஸ்எம்இ வணிகம் தொடர்பான கடன்களில் டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகத்தில் புதிய அளவுகோலை எஸ்பிஐ அமைத்துள்ளது. சிறு தொழில்கள் டிஜிட்டல் முறையில் விரைவாகவும் எளிதாகவும் கடன் பெற முடியும் என்பதை மனதில் வைத்து தான் 'MSME Sahaj' திட்டம். இதில் யாருடைய உதவியும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை செயல்முறையை முடிக்க முடியும். சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என்று காரா மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ