இனி வங்கிக்கு போக வேண்டாம், இதை மட்டும் செஞ்சாலே போதும்!

SBI Loan: எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச ஆவணங்கள் விரைவான ஒப்புதலுடன் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2021, 02:43 PM IST
இனி வங்கிக்கு போக வேண்டாம், இதை மட்டும் செஞ்சாலே போதும்! title=

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நீண்ட காலமாக கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உதவுவதோடு, பணத்தை முதலீடு செய்ய உதவுகிறது. மேலும், எஸ்பிஐ கடன் செயல்முறையை படிப்படியாக எளிதாக்கியுள்ளது. முதலில், நீங்கள் வங்கிக்குச் சென்று கடன் வாங்க விண்ணப்பிக்க வேண்டியிருந்தது, பின்னர் ஆன்லைனில் கடன் வாங்கும் வசதி வந்தது. தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் வசதியை தொடங்கியுள்ளது. 

எஸ்பிஐ (SBI) எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் என்கிற இந்த திட்டத்தில் திருமணத்திற்கோ அல்லது விடுமுறைக்கோ அவசரத் தேவைக்கோ பணம் தேவையென்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச ஆவணங்களுடன் விரைவான ஒப்புதலை பெற முடியும். மிஸ்ட் கால் அல்லது எஸ்எம்எஸ் சேவை மூலம் கடன் (SBI Loan) பெற விரும்புவர்களுக்கு வட்டி விகிதம் 9.60 சதவீதமாகும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ALSO READ | SBI Big update: வீட்டில் இருந்தபடியே இனி இதையும் ஆன்லைனில் செய்யலாம், அசத்தும் SBI!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ட்வீட்டின்படி, வாடிக்கையாளர்கள் 7208933142 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து லோன் பெறலாம். மேலும், எஸ்எம்எஸ் மூலம் விவரங்களை தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைன் எண்ணில் இருந்து PERSONAL என டைப் செய்து 7208933145 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். மிஸ்டுகால் மூலம் கடனைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற அல்லது எஸ்பிஐ தொடர்பு மையம் மூலம் விண்ணப்பிக்க 1800-11-2211 ஐ டயல் செய்யலாம். மேலும், எஸ்பிஐயின் எக்ஸ்பிரஸ் கிரெடிட் தனிநபர் கடன் பற்றிய கூடுதல் தகவலுக்கு bit.ly/37fnHhp இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் மிஸ்டுகால் கொடுத்ததும் வங்கி உங்கள் தகவல்களைப் பெறும், மேலும் வங்கி சார்பாக நீங்கள் தொடர்பு கொள்ளப்படுவீர்கள். இதில், வங்கியின் பிரதிநிதி உங்கள் வருமானம் மற்றும் உங்கள் கோரிக்கை போன்ற தகவல்களைக் கேட்பார், அதன் பிறகு உங்கள் கடனின் செயலாக்கம் தொடங்கும். இதற்குப் பிறகு, வங்கியின் நிலையான நடைமுறைக்கு ஏற்ப உங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News