Union Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் தங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருக்கிறார்கள். பல துறைகளை சேர்ந்த பிரதிநிதிகளையும் நிதி அமைச்சர் சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
பெரிய அறிவிப்புகள்
இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) வரி செலுத்துவோருக்கு பல சலுகைகளை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. வரி விலக்கு, வரி அடுக்குகளில் மாற்றம் ஆகியவற்றில் பெரிய அறிவிப்புகள் வரக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவற்றை தவிர மற்றொரு பெரிய அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகின்றது. அது வரி செலுத்துவோரின் (Taxpayers) சேமிப்புக் கணக்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சேமிப்புக் கணக்குகளுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிப்பது தொடர்பாக ஒரு பெரிய பரிசை அளிக்க அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேமிப்பு கணக்கு: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்
சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டியில் இருந்து கிடைக்கும் தொகையில் ரூ. 25 ஆயிரம் வரையிலான வருமானத்திற்கு பட்ஜெட்டில் டிடக்ஷன் அதாவது கழிவின் பலன் கிடைக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான முன்மொழிவுகளை அரசாங்கம் பெற்றுள்ளதாகவும், அதை அரசு மதிப்பீடு செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. சேமிப்புக் கணக்கு வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்குத் தொகையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவுகளில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கிகளிடமிருந்து கோரிக்கை
கடந்த வாரம் நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வங்கிகள் சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரிச் சலுகைகளை அதிகரிக்க நிதி அமைச்சக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டு அதற்கான முன்மொழிவை முன்வைத்தன. வங்கிகளின் முன்மொழிவு இன்னும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான இறுதி அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகக்கூடும் என கூறப்படுகின்றது.
வரி செலுத்துவோர் மற்றும் வங்கிகள் இரு தரப்பிற்கும் நன்மை
பட்ஜெட்டில் சேமிப்பு கணக்கில் (Savings Account) நிவாரணம் வழங்கப்பட்டால், வரி செலுத்துவோர் மற்றும் வங்கிகள் ஆகிய இரு தரப்பினருக்குமே அது பயனளிக்கும். இன்று, ஏறக்குறைய வரி செலுத்தும் அனைவருக்கும் ஏதாவது ஒரு வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு இருக்கின்றது. வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களது தொகையின் வட்டி வடிவில் வருமானத்தை அளிக்கின்றன. சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஆனால், இதில் வரி சலுகை அதிகரித்தால், சேமிப்புக் கணக்குகளில் அதிக பணத்தை வைத்திருக்க வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஊக்கம் கிடைக்கும். இது வங்கிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதன் மூலம் வங்கிகளுக்கு டெபாசிட் வடிவில் அதிக பணம் கிடைக்கும்.
தற்போது சேமிப்பு கணக்கில் எவ்வளவு வரி விலக்கு கிடைக்கிறது?
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rule) கீழ், வரி செலுத்துவோர் சேமிப்புக் கணக்கிலிருந்து வரும் வட்டி வருமானத்தில் வரையறுக்கப்பட்ட விலக்கு பெறுகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ், 10,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த வரி விலக்கு வரம்பு ரூ. 50 ஆயிரம் ஆக உள்ளது. இதில் பிரிவு 80 TTB இன் கீழ் ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) மீதான வட்டி வருமானமும் அடங்கும். இந்த வரி விலக்கு பலன்கள் பழைய வரி முறையின் (Old Tax Regime) கீழ் கிடைக்கும்.
புதிய வரி விதிப்பில் கிடைக்கும் சலுகைகள் என்ன?
புதிய வரி விதிப்பின் (New Tax Regime) கீழ், வரி செலுத்துவோருக்கு தற்போது சேமிப்புக் கணக்கு வட்டியில் வரி விலக்கு கிடைப்பதில்லை. எனினும், அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்பில் சில நன்மைகளைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு, தனிநபர் கணக்குகளில் ரூ.3,500 வரையிலான வட்டி வருமானத்திற்கும், கூட்டுக் கணக்குகளில் ரூ.7,000 வரையிலான வட்டி வருமானத்திற்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ