வேலைக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான முதலீடு மற்றும் சேமிப்பு ஆக இருப்பது வருங்கால வைப்பு நிதி (PF). மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு கட்டாயம் இருக்கும். இருக்க வேண்டும் என்பது தான் சட்டப்பூர்வ விதியும்கூட. ஊழியர்களின் இந்த கணக்கை வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகிக்கும். புதிய நிறுவனத்தில் வேலை சேர்ந்தால் நிறுவனம் மாறுமே தவிர, யுனிவர்சல் கணக்கு எண் மட்டும் மாறாது.
மேலும் படிக்க | அவசரத் தேவைக்கு பணம் தேவையா? பர்சனல் லோன் தவிர வேற ஆப்ஷன்கள் இவை...
ஒருவேளை புதிய நிறுவனத்துக்கு மாறும்போது உங்களின் பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு நீங்கள் மாற்றவில்லை என்றால் தற்போது கிடைக்கும் 8.5 சதவீதம் கிடைத்தாலும், அந்த கணக்கில் புதிய பங்களிப்பு ஏதும் இல்லாதபோது EPF கணக்கில் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. அதாவது, தொடர்ச்சியாக பிஎப் கணக்கில் பங்களிப்பு இல்லாதபோது, வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. அது இறுதியில் EPF கணக்கு வைத்திருப்பவரின் ஓய்வூதியப் பலனில் சில விஷயங்கள் கிடைக்காமல் போக வாய்ப்பை உருவாக்கிவிடுகிறது.
மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் ஒருவர், பணியை மாற்றிய பிறகு தனது பிஎஃப் கணக்கை மாற்றாதபோது என்ன நடக்கும் என்பது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், “ஒரு ஊழியர் வேலையை மாற்றிய பிறகு தனது இபிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால், கணக்கில் சம்பாதித்த வட்டி விகிதம்,புதிய EPFOநெறிமுறைகளில், EPF பங்களிப்பின் மாதாந்திர கிரெடிட் நிறுத்தப்படும் மாதத்திலிருந்து வரி விதிக்கப்படும்" என கூறியுள்ளார்.
செபி பதிவு செய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணரான ஜிதேந்திர சோலங்கி கொடுத்திருக்கும் அறிவுரை என்னவென்றால், EPF கணக்கு வைத்திருக்கும் ஊழியர் ஒருவர் பணியை மாற்றிய பின் உடனடியாக தங்கள் PF-ஐ மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். "ஒரு ஊழியர் பணி மாறிய பிறகு தனது EPF கணக்கை மாற்றத் தவறினால், அவர் தன்னுடைய EPF கணக்கின் தொடர்ச்சியையும் இழக்க நேரிடும். EPFO சந்தாதாரர்களுக்கு EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்களை வழங்குகிறது, அதற்கு EPF கணக்கில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தொடர்ந்து பங்களிப்பு தேவைப்படுகிறது. எனவே ஒரே யுஏஎன்னில் உங்கள் வருங்கால வைப்புநிதி கணக்கை பராமரிக்கவும்" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ