தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணிநேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Last Updated : Apr 7, 2018, 08:49 PM IST
தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! title=

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணிநேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் குமரிக்கடல் முதல் மாலத்தீவு வரையும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News