இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பம். அதற்கு பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியதில்லை. மனம் நிறைய அன்பும், பக்தியும் இருந்தால் போதும். கடவுளின் பூரண கடாட்சம் நம் மீது விழும்.
நாம் தினசரி சமைத்து சாப்பிடும்போது, ஒரு பிடி உணவை இறைவனுக்கு படைத்தால் போதும், இறை கடாட்சம் நமக்கு நிச்சயாமாக உண்டு. தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்யும் உணவே பிரசாதமாகிறது.
எந்த தெய்வத்திற்கும் பலவகை பட்சணங்கள் தேவையில்லை. ஆனால் தெய்வங்களுக்கு பிடித்த உணவை சமைத்து நிவேதனம் செய்தால் நன்மைகளைப் பெறலாம்.
Also Read | Ram Mandir Trust: லாக்கரில் இடமில்லை, எனவே தானம் கொடுக்கவேண்டாம்!!!
எந்த கடவுளுக்கு எந்த உணவு விருப்பமானது?
பிள்ளையார்: பிள்ளையாருக்கு எல்லா உணவுகளும் பிடிக்கும் என்றாலும், மிகவும் பிடித்தமானது மோதகம் ,அவல் , சர்க்கரைப் பொங்கல் ,கொண்டைக் கடலை , அப்பம், முக்கனிகள்.
பெருமாள்: காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் உணவுகள் பிடித்தமானது என்பது நம்பிக்கை. மஞ்சள் நிற சர்க்கரைப் பொங்கல்,புளியோதரை, லட்டு போன்றவற்றை பெருமாளுக்குப் படைக்கலாம்.
கிருஷ்ணன்: கிருஷ்ணாக அவதரித்த கண்ணனுக்கு வெண்ணெய்யும், அவலும் என்றால் மிகவும் விருப்பமானதாம்… இதைத் தவிர திண்பண்டங்கள்யும் குட்டிக் கண்ணனுக்கு விருப்பமானதே
Also Read | எல்லா மந்திரமும் ‘ஓம்’ என்று தொடங்குவதன் காரணம் என்ன தெரியுமா?
சரஸ்வதி: கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு வெண்பொங்கல் நிவேதனம் பிடித்தமானதாம்...
சிவன் : முக்கண்ணோன் சிவபெருமானுக்கு, வெண் பொங்கல் ,வடை, சாதம், பாலில் குங்குமப்பூ சேர்த்துப் படைத்தால் எம்பெருமானின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
முருகன்: வடை, சர்க்கரை பொங்கல், தினை மாவு, பழங்கள், வெல்லம்.
மகாலஷ்மி: செல்வத்துக்கு அதிபதியான மகாலஷ்மிக்கு அரிசிப் பாயசம் பிடித்தமானது. அனைத்து வகை இனிப்புகளும் திருமகளுக்கு விருப்பமானது தான்.
துர்கை: துர்கைக்கு பாயசம், சர்க்கரை பொங்கல்,உளுந்து வடை பிடித்தமானது.
ஐயப்பன்: ஹரிஹரனுக்கு அரவணப் பாயசம் விருப்பமானது.
Also Read | சிவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதனால் கிடைக்கும் பலன்களும்..!
ஆஞ்சநேயர்: சிவப்பு நிறத் துவரம் பருப்புடன் வெல்லம் சேர்த்துச் செய்கிற பண்டங்கள் ஹனுமனுக்கு விருப்பமானது.
அம்மன்: அம்மனுக்கு மிகவும் எளிதான கூழ் படைத்தால் போதும், அன்னை கூல் ஆகிவிடுவார்.
சனி : கருப்பு நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சனி பகவானுக்கு படைப்பது நன்று. கடுகு, கருப்பு எள்ளில் செய்த உணவுகள் சனி பகவானுக்கு பிடித்தமானவை.
Also Read | சென்னையின் முஸ்லிம் வர்த்தகர் அயோத்தி ராமர் கோயிலுக்கு 1 லட்சம் நன்கொடை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR