வாஷிங்டன்: வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிலும், இந்திய பல்கலைக்கழகங்களின் கிளைகளை வெளிநாட்டிலும் நிறுவ அனுமதிக்கும்இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை நிறுவக்கூடும் என்பதையும், இந்திய பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளிலும் கிளைகளை திறாக்கலாம் என்பது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி. உலகத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கான ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் (Bureau of South and Central Asian Affairs) ஒரு ட்வீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூலை 29ஆம் தேதியன்று தேசிய கல்வி கொள்கை (National Education Policy -NEP) 2020 க்கு ஒப்புதல் அளித்தது, இது பள்ளி மற்றும் உயர் கல்வித் துறைகளில் பெரிய அளவிலான, மாற்றத்தக்க சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது.
இதன் மூலம் நிறுவன ஒத்துழைப்பு, மாணவர் மற்றும் ஆசிரியர்களின் இயக்கம் மற்றும் உலக தரவரிசை பெற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க அனுமதிக்கப்படும். இதன் மூலம் கல்வி சர்வதேசமயமாக்குவது எளிமையாக்கப்படும்.
NEP 2020 அனைத்து மட்டங்களிலும் பள்ளி கல்விக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதை வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பு, பள்ளியில் இருந்து இடை நின்றவர்களை மீண்டும் பிரதான நீரோட்டத்திற்குள் இணைப்பதற்கான புதுமையான கல்வி மையங்கள், மாணவர்களையும் அவர்களின் கற்றல் நிலைகளையும் கண்காணிப்பது, முறையான மற்றும் முறைசாரா கல்வி முறைகள் இரண்டையும் உள்ளடக்கிய கற்றலுக்கான பல பாதைகளை எளிதாக்குதல், ஆலோசகர்கள் அல்லது பள்ளிகளுடன் நன்கு பயிற்சி பெற்ற சமூக சேவையாளர்கள் என பல முன்னோக்கு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Read Also | சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்..!
NIOS மற்றும் மாநிலங்களின் State Open Schools மூலம் 3,5 மற்றும் 8 வகுப்புகளுக்கு கற்றல், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சமமான இடைநிலைக் கல்வித் திட்டங்கள், தொழிற்கல்வி படிப்புகள், வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கை செறிவூட்டல் திட்டங்கள் ஆகியவையும் இலக்கை அடைவதற்காக முன்மொழியப்பட்ட வழிமுறைகள் ஆகும்.
NEP 2020 இன் கீழ் பள்ளி குழந்தைகளில் சுமார் 2 கோடி பேர் மீண்டும் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.