TNPSC Group4Exam:டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து

TNPSC Group4 Exam 2022; டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2022, 02:55 PM IST
  • தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வு
  • 18 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்
  • தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தகவல்
TNPSC Group4Exam:டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து title=

தமிழக அரசில் காலியாக இருக்கும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வசூலிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட  7,138 குரூப் 4 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடைபெற்றது. சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த தேர்வை, 18.50 லட்சம் பேர் பங்கேற்று எழுதினர். கிட்டதட்ட 84 விழுக்காட்டினர் தேர்வை எழுதியிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. பாடத்திட்டம் மாற்றத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் டிஎன்பிஸ்சி தேர்வு இதுவாகும். அதாவது, அங்கிலம் பாடத்திட்டம் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் மொழிப் பாடம் மற்றும் பொது அறிவு, கணக்கு உள்ளிட்ட பாடத்திட்டங்களைக் கொண்டு தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

பொது அறிவு பிரிவில் 100 கேள்விகளுக்கும், தமிழ் பாடப்பிரிவு நூறு கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தது. தமிழ் மொழிப்பாடமும், கணிதமும் கடினமாக இருக்கும் என தேர்வர்கள் எண்ணியிருந்த நிலையில், அதற்கு நேர் எதிராக தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்துள்ளது. தேர்வை எழுதிய பிறகு பேசிய தேர்வர்கள், அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததால்,  குரூப் 4 தேர்வு 2022 தேர்வு மிக கடினமாக இருக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் தேர்வு மிக மிக எளிமையாக இருந்தது. குறிப்பாக தமிழிலும், கணிதமும் எளிதில் விடையளிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்தனர். 

குரூப் 4 தேர்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், பிரபல டிஎன்பிஎஸ்சி பயிற்சி யூடியூப் சேனல்கள் குரூப் 4 வினாத்தாளுக்கான மாதிரி விடைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். அரசு சார்பில் வெளியிடப்படும் விடைகள் வெளியாக ஒருவாரம் காலம் ஆகும். அதற்கு முன்னதாகவே, யூ டியூப் மற்றும் பிரபல பயிற்சி நிறுவனங்கள் மாதிரி விடைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இதனைக் கொண்டு, தங்களின் மார்க் மற்றும் சரியான விடைகள் எத்தனை என்பதை தேர்வர்கள் ஓரளவிற்கு யூகித்துக் கொள்ள முடியும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வும் மிக எளிமையாக இருந்ததால், அந்த ஆண்டில் கட் ஆப் அதிகமாக இருந்தது. தற்போதும் அதேபோல வினாத்தாள் இருப்பதால், இந்த ஆண்டும் கட் ஆப் அதிகமாக இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேர்வர்கள் கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News