பல ஆண்டுகாலமாக மது என்பது புழக்கத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறது, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கலந்து மது தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களது நிலங்களில் விளைவிக்கும் பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை கொண்டும் ஆரோக்கியமான சில மதுபானங்களை தயாரித்துள்ளனர். மதுபானங்களில் சேர்க்கப்படும் பொருட்கள் மட்டும் மாறியிருக்கிறதே தவிர மதுபானம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. ரிக்வேதத்திலும், ஆயுர்வேதத்திலும் மதுபானம் பற்றி கூறப்பட்டு இருக்கிறது, ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு வகையான மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அசாமில் அபோங், ஜார்கண்டில் ஹாண்டியா, ஹிமாச்சல பிரதேசத்தில் லக்டி, கேரளாவில் தாடி கல்லு, மத்தியபிரதேசத்தில் மஹுவா, கோவாவில் ஃபெனி, ஆந்திர பிரதேசத்தில் டோடி, ராஜஸ்தானில் கேசர் கஸ்துரி என்ற பெயர்களில் மதுபானங்கள் பிரபலமாக தயாரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? இரத்த ஓட்டத்தில் கோளாறு, ஜாக்கிரதை
ஆரம்பகாலத்தில் மதுபானங்களின் சில ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும், தற்போது அதில் சில வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது, அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதிகளவில் மது அருந்தினால் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு இரைப்பை அழர்ஜி ஏற்படும், கல்லீரலில் வீக்கம், ஹெபட்டைட்டிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற பல பாதிப்புகள் அதிகப்படியான மது உட்கொள்வதால் ஏற்படும். மேலும் அதிகளவில் மது அருந்துவதால் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், மூளையின் நரம்பு பாதிப்பு, குழப்பம், மனநிலை மாற்றம், தெளிவற்ற சிந்தனை ஏற்படுவதோடு குரல்வளை, உணவுக்குழாய், மார்பகம், கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.
மிதமான அளவில் மது அருந்துவது இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக பாதுகாக்கிறது, அதுவே அதிகளவில் மது அருந்துவது மரணம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு ஆண் குறைந்தது 1-2 பானமும், பெண் 1 பானமும் அருந்துவது நல்லது. அதேபோல 1 வாரத்தில் 4 நாட்கள் மது அருந்துவது அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது, அதுவே 7 நாட்களும் தொடர்ந்து மது அருந்துவது பாதிப்பை ஏற்படுத்தும். மது அருந்துவதற்கு முன்னரும், மறுநாளும் ப்ரோடீன் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட வேண்டும். மது குடிப்பதற்கு முன் 1 பெரிய கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது மற்றும் மது அருந்திவிட்டு நன்கு ஓய்வெடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனையை நீங்கள் இப்படியும் தவிர்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ