சரும பொலிவை அதிகரிக்கும் சீரக நீர்: தினமும் குடிச்சா ஜொலிக்கும் முகம்

Cumin Seed Water Benefits: நமது சமையலில் பெரும்பாலான உணவுகளில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உணவிற்கு நல்ல சுவை மற்றும் மணத்தை அளிப்பதோடு இது பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 3, 2024, 05:59 PM IST
  • சீரக நீரில் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தி அதிகமாக உள்ளது.
  • இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  • சீரகத்தை கொதிக்க வைத்து அதை உட்கொண்டால், சருமத்தில் முதுமைக்கான அறிகுறிகள் தோன்றாது.
சரும பொலிவை அதிகரிக்கும் சீரக நீர்: தினமும் குடிச்சா ஜொலிக்கும் முகம் title=

Cumin Seed Water Benefits: நாம் நமது சமையலில் பல வித மசாலாக்களை பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் உணவின் சுவையை அதிகரிப்பதோடு இவற்றில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இவற்றால் நமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கின்றது. 

நமது சமையலில் பெரும்பாலான உணவுகளில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உணவிற்கு நல்ல சுவை மற்றும் மணத்தை அளிப்பதோடு இது பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சீரகத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

சீரகத்தின் பெயரிலெயே அதன் குணம் வெளிபப்டுகின்றது. சீரகம் என்றால் 'சீர்-அகம்' என்று பொருள். அகமாகிய நம் உடலை சீர்செய்யும் பணியை அது செய்கிறது. சீரகம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமயல் அறையிலும் உபயோகிக்கக்படும் ஒரு மசாலா பொருள் ஆகும். ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

சீரகத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் நன்மை பயக்கின்றன. சீரக தண்ணீரிலும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனால் தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல். இதை உட்கொள்வது சருமத்தையும் மேம்படுத்துகிறது. இதன் காரணமாக சரும ஆரோக்கியம் மேன்மையடைகின்றது. 

சீரக தண்ணீர் சரும ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துகின்றது?

சீரக நீரில் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தி அதிகமாக உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ஆண்டி ஆக்சிடெண்டுகள், இளமையில் முதுமையான தோற்றம்,, சோம்பல் மற்றும் பலவீனம் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன. சீரக நீரை தொடர்ந்து உட்கொள்வது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்றவற்றை நீக்கி, முதுமைக்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும். சீரக தண்ணீரில் உள்ள பண்புகள் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் மாற்றுகிறது. 

மேலும் படிக்க | தொடர்ந்து 2 வாரங்கள் மாதுளை ஜூஸ் குடித்தால் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா?

சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்வது, முகப்பருவைக் குறைப்பது, கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிப்பது என பல நன்மைகளை நமக்கு அளிக்கின்றன. 

தோல் பிரச்சனைகளுக்கு சீரக நீரை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?

சீரகத்தை கொதிக்க வைத்து அதை உட்கொண்டால், சருமத்தில் முதுமைக்கான அறிகுறிகள் தோன்றாது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்க உதவுகிறது. தோலில் ஏற்படக்கூடிய வீக்கம், எரிச்சல் ஆகியவற்றுக்கும் சீரகம் நல்ல மருந்தாக உதவுகிறது. இதை உட்கொள்வது தோலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: இந்த பானங்களை குடிச்சா ஈசியா சரி செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News