ஜிம் போகாமலேயே ஜம்முனு எடை குறைய... காலையில் இதை சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: பலர் பல விதங்களில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 14, 2024, 11:36 AM IST
  • தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன.
  • இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை குறைக்க உதவுகிறது.
  • தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட்டால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
ஜிம் போகாமலேயே ஜம்முனு எடை குறைய... காலையில் இதை சாப்பிடுங்க போதும் title=

Weight Loss Tips: இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களை பாடாய் படுத்தும் நோய்களில் உடல் உப்பசமும் ஒன்றாகும். இதன் காரணமாக இன்னும் பல நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன. அதிக உடல் எடை தன்னம்பிக்கை குறைய காரணமாக இருப்பதோடு, நமது உடலில் பல வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது. 

அதுவும், தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகமாகிவிட்டால், அதை குறைப்பது மிகப் பெரிய விஷயமாகிவிடுகிறது. பலர் பல விதங்களில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

உடல் பருமனை குறைப்பதில் காலை உணவுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. காலை உணவு ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் உட்கொள்ளும் மிக முக்கியமான உணவாக உள்ளது. இது நமது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவக்கூடிய சில சிறந்த காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

காலை உணவின் முக்கியத்துபம் என்ன?

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது: காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இதனால் கலோரிகள் எரியும் செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது. 

பசியைக் கட்டுப்படுத்துகிறது: காலையில் வயிறு நிரம்ப ஆரோக்கியமான காலை உணவை உட்கொண்டல், நாள் முழுவதும் ஏற்படும் பசியை அட்டுப்படுத்தலாம். இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.

ஆற்றலை வழங்குகிறது: காலை உணவு நாள் முழுதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. காலையில், சமச்சீரான ஆரொக்கியமான உணவுகளை உட்கொள்வதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

மேலும் படிக்க | Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..

தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க காலை உணவில் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஓட்ஸ்: ஓட்ஸில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும். 

தயிர்: தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட்டால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

முட்டை: முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. மேலும் இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.

பழங்கள்: ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவுகின்றன. 

கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிக அளவில் உள்ளன. இவற்றை காலை வேளையில் உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரத்துக்கு நிரம்பிய உணர்வுடன் இருக்கின்றது. இதனால் கலோரிகளும் விரைவாக எரிக்கப்பட்டு தொப்பை கொழுப்பு வேகமாக குறைகிறது.

மேலும் படிக்க | LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்க... உதவும் உணவுகளும்... பழக்கங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News