இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெறும் மருந்தை மட்டுமே தீர்வாக கொள்ளக் கூடாது. உணவு முறையில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, அதன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நம்முடைய உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு மோசமான பாதிப்புகள் உண்டாகின்றன.
கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் மிளகு:
கொழுப்பைக் கட்டுப்படுத்த தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மிளகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் எரிக்கப்படுவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம். இதைத் தவிர வேறு பல நன்மைகளையும் அள்ளித்தரும். இதன் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
மூளையை சுறுசுறுப்பாக்கும் மிளகு
கருப்பு மிளகு உங்கள் மூளைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு, மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
சளியை போக்கும்
மிளகை சூடான பாலில் கலந்து குடிப்பதால் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட்டு வந்தால், அதிலிருந்து நிரந்திர விடுதலை கிடைக்க, தினமும் மிளகு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். ஒரு மிளகு என்ற அளவில் தொடங்கி, இரண்டு மூன்று என தினமும் ஒரு மிளகை அதிகரித்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும். பின்னர், ஒரு மிளகு என்ற அளவில் படிப்படியாக, 14, 13 என குறைத்து அடுத்த 15 நாட்களுக்கு ஒரு மிளகு என்ற அளவு வரும் வரை சாப்பிட வேண்டும். இதன் மூலம் சளி பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.
நீரிழப்பு நீங்கும்
நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை இருந்தால், கருமிளகை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தண்ணீர் சத்துபற்றாக்குறை ஏற்படாது. சோர்வாகவும் இருக்காது. இதனுடன், சருமத்தில் வறட்சியும் இருக்காது.
அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் அளவின் காரணமாக சிரமப்படுபவர்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்க விரும்புபவர்களுக்கு இந்த தகவல்கள் பெரும் உதவிகரமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ