நீண்ட ஆயுளைத் தரும் மூச்சு பயிற்சி.. செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்..!

Breathing Exercise for Healthy Long Life: காற்று மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரலை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக் கூடியது மூச்சு பயிற்சி.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2024, 04:45 PM IST
  • ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ, மூச்சு பயிற்சி மிக அவசியம்.
  • மூச்சுப்பயிற்சியினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
  • மூச்சுப் பயிற்சி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
நீண்ட ஆயுளைத் தரும் மூச்சு பயிற்சி.. செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்..! title=

Breathing Exercise for Healthy Long Life: நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் மூச்சு. மூச்சு விடுவது நின்று விட்டால் உயிர் பிரிந்து விட்டது என்று அர்த்தம். ஆக்ஸிஜனை உள்ளே உறிஞ்சி கார்பன் டையாக்சைடு வெளியேற்றும் நுரையீரலின் இயக்கம் தான் மூச்சு விடுதல். இந்நிலையில் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ மிக அவசியம் என்று யோக கலை வல்லுனர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரலை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக் கூடியது மூச்சு பயிற்சி.

மூச்சுப் பயிற்சியிபால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

மூச்சுப்பயிற்சியினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் (Health Tips) ஏராளம். நுரையீரல் ஆரோக்கியம் முதல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, இதய துடிப்பை சீராக்குவது, உடலில் ஆற்றல் அளவு மேம்படுவது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் மூச்சு பயிற்சி மற்றும் தியானம் மூலம், பயம், கோபம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் எதுவும் மனதில் இருக்காது.

மூச்சுப் பயிற்சி செய்யும் முறை (How to Do Breathing Exercise)

மூச்சுப் பயிற்சி செய்ய தரையில் நேராக உட்கார்ந்து, வலது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, இடது மூக்கின் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். அதேபோன்று, இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலது மூக்கின் வழியாக வெளியே விட வேண்டும். இவ்வாறு மாறி மாறி பத்து பதினைந்து நிமிடங்களுக்கு செய்வதை மூச்சுப் பயிற்சி.

மூச்சுப் பயிற்சி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மூச்சுப்பயிற்சி தினமும் 10 நிமிடத்தில் இருந்து 15 நிமிடம் வரை செய்தாலே, வியக்கத்தக்க பலன்களை பெறலாம். மூச்சுப் பயிற்சி செய்யும் போது, இடையூறுகளும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக செல்போன் போன்றவற்றை பக்கத்தில் வைத்திருக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்வது மிக முக்கியம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு, மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை வலுவாக்கும் அற்புத பானங்கள்: குடித்தால் குஷியாக வாழலாம்

மூச்சுப் பயிற்சியின் போது செய்யக்கூடாதவை

மூச்சுப் பயிற்சி செய்யும் போது கவனச் சிதறல்கள் எதுவும் இருக்கக் கூடாது. கூன் போட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டு மூர்ச்சை பயிற்சி செய்யக்கூடாது. மூச்சுப்பயிற்சி செய்யும் போது நேராக உட்கார வேண்டும். அதாவது உங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். முதுகு தண்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், சுவற்றில் சாய்ந்த படி நேராக அமர்ந்து மூச்சு பயிற்சி செய்யலாம்.

மூச்சுப் பயிற்சி: சில வகைகள்

மூச்சுப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன (Types of Breathing Exercises). எனினும் எளிய மூச்சுப் பயிற்சி தினமும் செய்தாலே எண்ணற்ற பலன்களை பெறலாம். இதில் பல வகைகள் உள்ளன. நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியுடன், ஆழ்ந்த மூச்சு பயிற்சி, வாய் வழியான மூச்சு பயிற்சி, மார்பை விரிவுபடுத்தி செய்யும் மூச்சு பயிற்சி, நாக்கை வழியே நீட்டிக்கொண்டு செய்யும் மூச்சு பயிற்சி ஆகியவற்றை செய்யலாம். இவற்றை செய்யும் முன், ஒரு நிபுணரிடம் பயிற்சி பெற்று அவர்கள் வழிகாட்டியதன் படி செய்தது நல்லது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Yoga For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சூப்பர் யோகாசனங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News