உறக்கத்துக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு? டாக்டர் சொல்வது இதுதான்

Diabetes Control Tips: ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், ஆரொக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2024, 04:05 PM IST
  • தினமும் ஒரே நேரத்தில் உறங்குவது நல்லது.
  • 7-8 மணிநேரம் தூங்கும் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து மிகக் குறைவு.
  • உறங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரம் முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.
உறக்கத்துக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு? டாக்டர் சொல்வது இதுதான் title=

Diabetes Control Tips: இன்றைய அவசர காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்வியல் வெகுவாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றில் நீரிழிவு நோயும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. 

ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், ஆரொக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பல இயற்கையான வழிகளும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

தூக்கத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது என கூறினால் பலர் நம்பாமல் போகலாம். ஆனால், போதுமான அளவு நல்ல தூக்கம் டைப் 2 நீரிழிவு நோயைக் (Type 2 Diabetes) குறைக்கும் என்று சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

போதுமான உறக்கம் தேவை

போதுமான அளவு உறங்குவதும், தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதும் இன்சுலின் எதிர்ப்பு, ப்ரீ-டயாபடீஸ் மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு தலைசிறந்த நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுதிர் குமார், டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை பாதிக்கும் பல்வேறு தூக்கம் தொடர்பான காரணிகளை பற்றி தனது சமூக ஊடக தளமான X -இல் விளக்கியுள்ளார். 

தாமதமாக தூங்குவது ஆபத்தை அதிகரிக்கிறது

"தூக்கம் இல்லாமை, அதிக தூக்கம், இடையூறுகள் நிறைந்த தூக்கம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களாலும், தினமும் தூங்கும் நேரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் வேறுபாடு இருந்தாலும். டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். தாமதமாக தூங்கி தாமதமாக எழும் பழக்கத்தால் இந்த ஆபத்து இன்னும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார். 

மேலும் படிக்க | மூட்டுவலி, பலவீனம், இரத்தசோகை நீங்க.. ஊற வைத்த பாதாம் - கொண்டக்கடலை ஒன்றே போதும்

மாறும் பணி நேரங்களால் உறக்கம் கெடலாம்

இந்த காலத்தில் பல நிறுவனங்கள் 24x7 பணிபுரிகின்றன. ஆகையால், பணியாளர்கள் மாறி மாறி பல ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். ஷிப்ட் வேலை பெரும்பாலும் மோசமான தூக்கத்திற்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கருதுகிறார்கள். இது டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் முக்கியமான ஒரு காரணியாக கருதப்படுகின்றது. 

இவர்களுக்கு தூக்கத்தால் வரும் டைப் 2 நீரிழிவு நோயின் ஆபத்து குறைவாக இருக்கும்:

- 7-8 மணிநேரம் தூங்கும் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகின்றது.

- தினமும் ஒரே நேரத்தில் உறங்குவது நல்லது.

- உறங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரம் முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.

- காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நெஞ்செரிச்சல், எடை இழப்பு, மார்பு வலி, குரலில் மாற்றம்: நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News