இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 89,129 புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஆறு மாதங்களில் ஒரே நாளில் பதிவான் அதிகபட்ச தொற்று பாதிப்புகள் ஆகும்.
80,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகளுடன், இது வரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260 ஆகவும், சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 6,58,909 என்ற அளவை எட்டியுள்ளதாகவும் சனிக்கிழமை (ஏப்ரல் 3) காலை 8 மணிக்கு வெளியிட்டப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 714 பேர் தொற்றுநோயால் இறந்த நிலையில், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164,141 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் கோவிட் -19 ( COVID-19) தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 47,827 ஆக பதிவாகியுள்ளன, இதை அடுத்து மகாராஷ்டிரா மாநில அளவிலான மொத்த தொற்று பாதிப்பு 2,904,076 ஆக உள்ளது. மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையில், மகாராஷ்டிராவைத் தவிர (2,904,076), COVID-19 தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், கேரளா (1,124,584), கர்நாடகா (997,004), ஆந்திரா (901,989), மற்றும் தமிழ்நாடு (886,673).
ALSO READ | வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா; இல்லை அழவும் வேண்டும்
தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியின் (Corona Vaccine) முதல் தடுப்பூசி பெற்ற 6,13,56,345 பேர் உட்பட மொத்தம் 7,06,18,026 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. "நாடு முழுவதும் COVID-19 தடுப்பூசி போடு பணி தொடங்கப்பட்ட 77 வது நாளன்று, மொத்தம் 12,76,191 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன" என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி 36.7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டன.
இந்தியாவில் மூன்றாம் கட்ட கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது, இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ALSO READ | ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -5 தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கலாம்: Dr Reddy's
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR