நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சமா? இந்த 'டிப்ஸ்' மூலம் அதை தடுக்கலாம்

Diabetes Cure: உங்கள் மரபணுவில் நீரிழிவு நோய் இருந்தாலும், உங்கள் பழக்கவழக்கங்களால் அதன் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2022, 07:17 PM IST
  • நாம் உணவு உட்கொள்ளும் நேரம் மிகவும் முக்கியமானது .
  • இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • உடலுக்கு போதுமான சூரிய ஒளி மற்றும் வைட்டமின் டி கிடைக்க வேண்டும்.
நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சமா? இந்த 'டிப்ஸ்'  மூலம் அதை தடுக்கலாம்  title=

சர்க்கரை நோய்: தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோய் வருவது சகஜமாகிவிட்டது. நாம் சாதாரணமாக பிறரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே பலருக்கு இந்த நோய் இருப்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகின்றது. நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும். ஒன்று டைப் ஒன் டயபடீஸ், அதாவது முதல் வகை நீரிழிவு நோய், மற்றொன்று டைப் டூ டயபடீஸ், அதாவது இரண்டாம் வகை நீரிழிவு நோய். டைப் 1 நீரிழிவு நோய் பெரும்பாலும் மரபணு சார்ந்தது. இரண்டாம் வகை நீரிழிவு நோய் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் ஏற்படுகிறது. 

உங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோய்க்கான குடும்ப வரலாறு இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் சிலருக்கு மிக விரைவில் அல்லது பின்னர் நீரிழிவு நோய் ஏற்படலாம். இது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் அல்லது மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும் இருக்கலாம். உங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோய்க்கான வரலாறு இருந்தாலும், நல்ல உணவு மற்றும் வாழ்க்கை முறையின் உதவியுடன் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம். உங்கள் மரபணுவில் இந்த நோய் இருந்தாலும், உங்கள் பழக்கவழக்கங்களால் அதன் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க அல்லது விரைவில் வராமல் தடுக்க பல வழிகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பது அதன் ஆபத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நாம் உணவு உட்கொள்ளும் நேரமும் மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் சிறிது சிறிதாக, அடிக்கடி உணவு உட்கொண்டு இதில் ஆரோக்கியத்தை கடைபிடிக்க முடியும். சிலர் இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் மூலம் இதற்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள். பொதுவாக, இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் உணவுக்கான நமது கிளைசெமிக் எதிர்வினை அதிகமாகவும் குறைவாகவும், சீரற்ற முறையில் இருக்கும்.

மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்!  

இந்த பழக்கங்கள் ஆபத்தை குறைக்கலாம்

- மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து விலகி இருங்கள்

- உடலுக்கு போதுமான சூரிய ஒளி மற்றும் வைட்டமின் டி கிடைக்க வேண்டும்.

- ஒவ்வொரு வாரமும் அல்லது சரியான இடைவெளியில் உங்கள் எடையைக் கண்காணித்து, சிறந்த வரம்பிலிருந்து 1 கிலோ குறைவாக எடையை வைத்துக் கொள்ளுங்கள்.

- மன அழுத்தத்தை விலக்கி வைக்கவும். மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, ​​​​சர்க்கரை சாப்பிடுவதற்கான ஆசை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் அவை பணி செய்ய வேண்டிய வழியில் பணி செய்ய முடிவதில்லை. 

- வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். சில முக்கிய இரத்தப் பரிசோதனைகளை நீங்கள் கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.

- பிளட் சுகர் ஃபாஸ்டிங் டெஸ்ட், அதாவது சாப்பிடுவதற்கு முன்னதாக அல்லது சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து செய்யப்படும் பரிசோதனை ஒரு முக்கிய சோதனையாகும்.

- எஸ்பிஏ1சி, சிறுநீர் பரிசோதனை, கல்லீரல் சோதனை மற்றும் கொழுப்புச் சத்து போன்றவைகளும் செய்யப்பட வேண்டும்.

- சீரான இடைவெளியில் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருக்கா? முருங்கை என்னும் மந்திரம் கை கொடுக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News