உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை நிலை, உணவு முறை ஆகியவற்றுடன் கூடவே, இன்றைய டிஜிட்டல் காலத்தில், கம்ப்யூட்டரை வாழ்க்கையாகி போய்விட்டது. இதனால் கழுத்து வலி முதுகு வலி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதற்கு நம் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் மூலம் தீர்வை காணலாம்.
முதுகு கழுத்து வலிக்கான முக்கிய காரணங்கள்
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை தவிர, அதிக உடல் பருமன், விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு, உட்கார்ந்து கொள்ளும் தோரணை ஆகியவை முதுகு கழுத்து வலிக்கான முக்கிய காரணம். உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியே இல்லாத நிலையில் தசைகள் இறுகி, கழுத்து வலி மற்றும் முதுகு வலியை ஏற்படுத்துகின்றன. முதுகு வலி தீவிரமானால், சரியாக உட்கார முடியாத நிலை கூட ஏற்படலாம்.
முதுகு கழுத்து வலிக்கான உடற்பயிற்சிகள்
முதுகு கழுத்து வலி தீர மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது, கழுத்திற்கான பயிற்சிகள், மற்றும் முதுகு தண்டுவடத்தை வலுவாக்கும் நீட்சி பயிற்சிகள். இது போன்ற பயிற்சிகளை செய்யும்போது தசைகள் வலுவாகி, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். முதுகு கழுத்து வலிக்கு உடற்பயிற்சி தான், நீண்ட கால நிரந்தர தீர்வை அளிக்கும் என்பதால், தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், உங்களுக்கான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது மிக அவசியம்.
முதுகு வலி கழுத்து வலி ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு எதிரி. இவற்றில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. கூடுதலாக எலும்பிலிருந்து கால்சியத்தை உறிஞ்சி உடலை சல்லடையாக்கிவிடும். நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க இதில் சேர்க்கப்படும் சோடியம் மற்றும் பிற ரசாயனங்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அதோடு அதிக அளவிலான உப்பு சேர்க்க உணவுகள், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் எலும்பு ஆரோக்கியத்தை காலி செய்து விடும். டீ காபி அதிகளவிற்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | உடல் எடையை ஈசியா குறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்
முதுகு வலி கழுத்து வலி ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
வலி நிவாரணத்திற்கு உணவு முறையும் அவசியம். சமச்சீரான உணவை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதுகுத்தண்டை வலுப்படுத்தும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உலர் பழங்கள் குறிப்பாக, பாதாம் பருப்பு வாதமைப்பருப்பு மிக உதவும். இவற்றில் கால்சியம் வைட்டமின் ஈச்சத்தும் நிறைந்துள்ளது என்பதால் முதுகுத்தண்டை வலுப்படுத்தும். கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதோடு, திசுக்களையும் வலுப்படுத்தும். எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமல்ல, வைட்டமின் சி யும் அவசியம். எனவே ஆரஞ்சு எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை தவறாமல் சேர்த்துக் கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ