சரும அழகுக்கு உதவும் உணவுகள்

சரும பளபளப்பிற்கு நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளும் உதவுகின்றன.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 10, 2022, 05:02 PM IST
  • சருமத்திற்கு உதவும் உணவுகள்
  • நம் அன்றாட உணவுகளே சரும பளபளப்புக்கு உதவுகின்றன
சரும அழகுக்கு உதவும் உணவுகள் title=

அகத்தின் அழகைவிட சருமத்தின் அழகை வைத்துதான் தற்போதைய சமூகத்தில் பெரும்பாலானோரால் மற்றவர்கள் அணுகப்படுகிறார்கள். எனவே சருமத்தை அழகுப்படுத்த க்ரீம்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மூலமாகவே சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.

தக்காளி:

சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும். 

வால்நட்:

ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் வால்நட்டில் நிரம்பியுள்ளன. இவை சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக மாறுகின்றன.

மேலும் படிக்க | ரொம்ப ஹேங் ஓவரா... வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே ஓரங்கட்டுங்க

அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு இது சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தத்தையும், அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன. 

ஆலிவ் எண்ணெய் கருப்பு சாக்லேட்: 

சாக்லேட் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது. அதில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. 

அவை பல வகையான நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் டார்க் சாக்லேட், பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு உகந்த உணவாக அமைகிறது.அதில் உள்ள பிளவோனால்கள் சூரிய கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதால் டார்க் சாக்லேட்கள் சரும பளபளப்புக்கு உதவுகின்றன.

அவகேடோ: 

அவகேடோவில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி சத்தானது தொற்றுநோயை எதிர்த்து போராடும் வலிமையை அளிக்கக்கூடியது. 

மேலும் படிக்க | அன்னாசிப்பழம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுமா?

இதிலிருக்கும் வைட்டமின் ஈ, சருமத்திற்கு பாதுகாப்பு தரக்கூடியது. இது தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News