பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் உடலுக்கு நல்லது செய்யும் சில காய்கறிகளே, ஏற்கனவே உள்ள நோய் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கவும் செய்யலாம். இயல்பான வாழ்க்கையையே முடக்கியும் போடலாம். எழுந்து உட்காரக்கூட சிரமப்படும் நிலைக்கு ஆளாக்கலாம். யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் (High Uric Acid) உணவுகளை உண்ணும்போது அல்லது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாமல் போகும்போது யூரிக் அமிலம் அதிகரித்து மூட்டுகளில் சேரும். இதனால் மூட்டுவலி, முழங்கால் வலி போன்றவையும் ஏற்படும்.
ஆரோக்கியத்திற்காக பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் அறிவுறுத்தினாலும், சில காய்கறிகள் உங்களுக்கு நன்மை அளிக்காமல் தீங்கு விளைவிக்கும். கைகள் மற்றும் கால்களில் பிரச்சனைகள் ஏற்படலாம், அது நடக்கவோ அல்லது உட்காரவோ சிரமப்படும் சூழ்நிலைக்கு உங்களை கொண்டு செல்லலாம்.
இதற்கு முக்கிய காரணம், யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதாகும். உடலின் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், கீல்வாத பிரச்சனையும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ
யூரிக் அமிலம் தொடர்ந்து அதிகரித்தால், எலும்புகளில் அமிலப் படிகங்கள் உருவாகின்றன. இதன் காரணமாக, எலும்புகளில் இடைவெளி ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுகிறது.
ஆரோக்கியத்தை கெடுக்கும் காய்
அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் பச்சை காய்கறியான பச்சை பட்டாணியை சாப்பிடக்கூடாது. இதற்குக் காரணம் பட்டாணியில் உள்ள அதிக புரதச் சத்துதான். இது பியூரின் அளவை அதிகரிக்கிறது. இதனால் எலும்புகளில் ப்யூரின் அளவு அதிகரித்து, அது அங்கே தேங்க ஆரம்பிக்கும். அங்கு யூரிக் அமிலம் சேர்ந்து அது கற்களாக மாறுகின்றன.
எலும்பு மூட்டுகளில் இடைவெளிகளை உருவாக்கும் இந்த கற்கள் மூட்டுகளில் வலி, வீக்கம், கீல்வாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, பட்டாணியை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
மேலும் படிக்க | அதிக கால்சியமும் ஆபத்து தான்! தமனிகளில் கால்சியம் படிந்தால் என்ன ஆகும்?
வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது
பச்சை பட்டாணியை அதிகமாக உட்கொள்வது உங்கள் வயிற்றின் நிலையை மோசமாக்கும். இது வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. இதன் காரணமாக, வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, உடலில் வீக்கம் அதிகரிக்கத் தொடங்குகிறது. பியூரின்களை அதிகரித்து யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதன் காரணமாக, சிறுநீரக கற்களும் ஏற்படலாம்.
பெண்களுக்கு பச்சைப் பட்டாணி எச்சரிக்கை
பட்டாணியை அதிகமாக உட்கொள்வது ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பெண்கள் அதிக பச்சைப் பட்டாணியை உண்பதால் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. எனவே, பட்டாணியை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ