உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இதய நோய்களைத் தவிர்க்க விரும்பினால், நிச்சயமாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள காயகறிகள் மட்டும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
இன்றையை வாழ்க்கை ஓட்டத்தில், 40 வயதில், மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினை, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வரத் தொடங்குகின்றன. இது மிகப்பெரிய காரணம். நமது வாழ்க்கை முறை. பெரும்பாலான மக்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.
நம் உடலில் 2 வகையான கொழுப்பு உள்ளது. ஒன்று நல்ல கொழுப்பு, மற்றொன்று கெட்ட கொழுப்பு. கெட்ட கொழுப்பு உடலில் சேர்ந்தால், அது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. கெட்ட கொழுப்பை குறைக்க சில பழங்கள் மற்றும் காய்கறிகளை, சில தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
கொழுப்பைக் குறைக்க, அனைத்து விதமான பழங்களும் உதவிடும். பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது கொழுப்பைக் குறைக்கிறது. அதிலும் சில பழங்களில் கொழுப்பை விரைவாகக் குறைக்கும் பொருட்கள் உள்ளன. அவற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு
பழங்கள்:
ஆப்பிள்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் - இந்த பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவற்றில் பெக்டின் எனப்படும் சிறப்பு நார் சத்து உள்ளது. இந்த பழங்களை உங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கொழுப்பைக் குறைக்கும்.
பெர்ரி மற்றும் திராட்சை - கொழுப்பைக் குறைக்க, ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரி மற்றும் திராட்சை போன்ற அனைத்து வகையான பெர்ரிகளையும் சேர்க்க வேண்டும். அவற்றில் அதிக அளவு பெக்டின் உள்ளது. இது கொழுப்பதோடு, ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
அவகெடோ- இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பைக் குறைக்கிறது.
ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து
காய்கறிகள்
கீரை- கீரை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கீரையை சாப்பிடுவதால் உடலில் நைட்ரிக் ஆக்சைடு அதிகரிக்கிறது. இது கொழுப்பைக் குறைக்கிறது.
பச்சை இலை காய்கறிகள்- கெட்ட கொழுப்பைக் குறைக்க, நீங்கள் பச்சை காய்கறிகளை தவறாமல் சேர்க்க வேண்டும். பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
வெண்டைக்காய்: இது கொலஸ்ட்ராலை பெருமளவு குறைக்கிறது.
கத்திரிக்காய்- இதய நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியாகும். கத்திரிக்காய் செரிமான அமைப்புக்கும் நல்லது. கத்திரிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பு நன்றாக குறைகிறது.
தக்காளி- தக்காளியை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பு குறைகிறது. தக்காளி சாறு உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. அதனால்தான் தினமும் தக்காளி சாப்பிட வேண்டும்.
உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய தானியங்கள், பருப்புகள்
அனைத்து தானியங்களிலும் நிறைய நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக நம் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு குறைகிறது. அதிலும், பார்லி, மொச்சை போன்றவை மிகவும் நல்லது. முழு தானியங்கள் மிகவும் சிறந்தது.
அதே போல், அனைத்து பருப்பு வகைகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பயறு வகைகளில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. பயறு வகைகளை தவறாமல் சாப்பிடுவது உணவில் கெட்ட கொழுப்பை கரைக்கும், கூடுதலாக, வைட்டமின் பி அதிக அளவில் கிடைக்கும்.
ALSO READ | இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள பிற தடுப்பூசி விபரங்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR