Diabetes Diet tips Tamil | நீரிழிவு நோய் என்பது கடந்த சில ஆண்டுகளாக வேகமாகப் பரவி வரும் ஒரு நோயாகும். இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. தவறான உணவுப்பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் உருவாகும் இந்நோய், உடலின் பல பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் சிறுநீரக பிரச்சனைகள், இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து, கண் குருட்டுத்தன்மை மற்றும் மூட்டு பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம்.
இவையெல்லாம் ஏற்படக்கூடாது என விரும்பினால் சர்க்கரை நோயாளிகள் முதலில் செய்ய வேண்டியது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்கள் உடலுக்கு மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும். சர்க்கரையை கட்டுப்படுத்த, உணவைக் கட்டுப்படுத்துவது அவசியம். குறிப்பாக, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
மேலும் படிக்க | நெய் vs ஆலிவ் எண்ணெய்... இரண்டில் எது பெஸ்ட்.... நிபுணர் கூறுவது என்ன
நீரிழிவு நோயாளிகள், இனிப்புகளை உட்கொள்வது இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கும். செயற்கை அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனைப் பயன்படுத்தலாம் என்று சிலர் அறிவுறுத்துகிறார்கள். நீரிழிவு நோயாளிகள் உண்மையில் தேன் மற்றும் வெல்லம் சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. வெல்லம் மற்றும் தேன் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் பல நோய்களும் குணமாகும்.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வெல்லம் சாப்பிடலாம். சர்க்கரையை விட வெல்லம் சாப்பிடுவது அதிக பலன் தரும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல தீங்குகளையும் ஏற்படுத்துகிறது.வெல்லம் மற்றும் தேன் இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் உட்கொள்ளும் போது, அவை சர்க்கரையாக மாறுகின்றன, இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இரண்டையும் தவிர்ப்பது நல்லது
பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உணவு மீது இருக்கும் ஆசையை தீர்த்துக் கொள்ள வெல்லத்தை உட்கொள்வார்கள். ஆனால் 10 கிராம் வெல்லத்தில் 65% முதல் 85% வரை சுக்ரோஸ் உள்ளது, இது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். இது மிகப்பெரிய ஆபத்தை கொண்டுவந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தைத் தவிர்ப்பதே நல்லது. சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாம். வெல்லத்தில் மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது சர்க்கரையை அதிகரிக்கிறது. தேனில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை உட்கொள்ளலாம். இருப்பினும் உங்களுக்கு இருக்கும் ஆரோக்கிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி உணவுமுறைகளை வகுத்துத் கொள்வதே சாலச்சிறந்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குடல் பிரச்சனை தீர்வு! இந்த 3 உணவுகள் சாபிட்டால் மலச்சிக்கல், வாயு இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ