சுலபமா தொப்பை கொழுப்பை குறைக்க சுரைக்காய் போதும்: இப்படி சாப்பிடுங்க... எடை குறையும்

Weight Loss Tips: நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில காய்கறிகளை கொண்டே நம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என்பதை பலர் அறிவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு காயை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2023, 06:05 AM IST
  • சுரைக்காய் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா?
  • இதை சாப்பிடுவது வயிற்று கொழுப்பில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
  • இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சுலபமா தொப்பை கொழுப்பை குறைக்க சுரைக்காய் போதும்: இப்படி சாப்பிடுங்க... எடை குறையும் title=

Weight Loss Tips: எடை அதிகரிப்பு என்பது இன்று மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ள வழிகளாக உள்ளன. அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில காய்கறிகளை கொண்டே நம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என்பதை பலர் அறிவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு காயை பற்றி இங்கே காணலாம்.

எடை குறைக்க சுரைக்காய் (Weight Loss With Bottle Gourd) 

சுரைக்காய் நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்களில் ஒன்றாக உள்ளது. இதில் அதிக நீர்சத்து உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நல்ல அளவு உணவு நார்ச்சத்தும் உள்ளது. பொதுவாக உடல் எடையை குறைப்பதற்காகவும் பலர் சுரைக்காய் சாப்பிடுவதுண்டு. உண்மையாகவே சுரைக்காய் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா? இதை சாப்பிடுவது வயிற்று கொழுப்பில் (Belly Fat) ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

சுரைக்காய் தொப்பையை குறைக்குமா?

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், பொதுவாக உடலில் எடை எப்படி குறைகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு என்ன முக்கியம்? உடல் எடையை குறைக்க, கொழுப்பை குறைக்க வேண்டும். கொழுப்பைக் குறைக்க, கலோரி எண்ணிக்கையை குறைக்க வேண்டியது அவசியம். இது தவிர, நமது உடல் செயல்பாடும் முக்கியமானது. இது நமது வளர்சிதை மாற்ற விகிதத்தையும் மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க இது முக்கியம். இப்போது சுரைக்காய் பற்றி பேசுகையில், அதில் கொழுப்பு இல்லை, மேலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கொழுப்பை அதிகரிப்பதில் பங்கு வகிக்கும் உறுப்புகள் இதில் இல்லை. ஆகையால் வயிற்று கொழுப்பைக் குறைக்க சுரைக்காய் நல்ல காயாக கருதப்படுகின்றது. 

மேலும் படிக்க | சாப்பாத்தி மாவுல ‘இவற்றை’ கலந்து ரொட்டி செய்தால் சர்க்கரை நோயை விரட்டலாம்!

சுரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Bottle Gourd)

சுரைக்காயில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடல் எடையை நேரடியாக பாதிக்கின்றன.

குறைந்த கலோரிகள்: சுரைக்காய் (Bottle Gourd) மிகவும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. சுரைக்காய் சாப்பிடுவதால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு கிடைக்கும். அதேசமயம் உடலில் கலோரி அளவும் அதிகரிக்காது. வயிற்றில் நிரம்பிய உணர்வு இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படாது. இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. 

நீரேற்றம்: சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது தவிர, தாகம் காரணமாக அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால், அதுவும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை: சுரைக்காய் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது சமச்சீரான உணவுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சுரைக்காய் சாப்பிடுவது எப்படி?

வயிற்று கொழுப்பைக் குறைக்க சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் எளிதானது. இதற்கு முதலில் ஒரு சுரைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். தோலுரித்து நன்கு கழுவிக்கொள்ளவும். இப்போது அதன் சாறு எடுத்து உட்கொள்ளுங்கள். இதை காலை எழுந்தவுடன் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.

உடல் எடையை குறைக்க விரும்பினாலும் அல்லது தொப்பையை குறைக்க விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுமுறையுடன் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது தவிர, உடல்நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், உணவுக் கட்டுப்பாட்டிற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள். அதே சமயம், ஒரு நாளைக்கு எவ்வளவு சுரைக்காய் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்களிடம் கேட்க மறக்காதீர்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முட்டை vs நட்ஸ்: காலை உணவுக்கு ஏற்ற சிறந்த உணவு எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News