Sesamin: புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்! அளவுக்கு மிஞ்சினால்?

கருப்பு எள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது  புற்றநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்... ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எள்ளுக்கும் பொருந்தும்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 01:48 PM IST
  • புற்றுநோய் செல்களை அழிக்கும் எள்
  • எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட எள்
  • இளம் நரையை தடுக்க எள் பயன்பாடு
Sesamin: புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்! அளவுக்கு மிஞ்சினால்? title=

எள் என்பதற்கு முன் எண்ணையாக இருக்க வேண்டும் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், நல்லெண்ணெயாக மாறி எள் கொடுக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், எள் தனது அடிப்படையான கருப்பு அவதாரத்தில் கொடுக்கும் அளப்பரிய வரங்களைக் Health Benefits கேட்டால், அதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கிவிடுவீர்கள். 

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எள்ளுக்கும் பொருந்தும். எள்ளு சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்களை பட்டியலிட்டால், அதை பயன்படுத்தி பலனடையலாம். 

ALSO READ | அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி

எள் அதிலும் கருப்பு எள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும் என்றும், புற்றுநோய் வந்தவர்களுக்கும் பலனளிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள். 

முறுக்கு, சீடை, எள்ளுருண்டை என திண்பண்டங்களிலும், பலவிதமான சிற்றுண்டிகளிலும் எள் சேர்க்கும் பழக்கம் உலகம் முழுவதும் தொன்மையாக தொடர்கிறது.

எள்ளின் எதிர்ப்பு சக்தி 
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் என எள்ளில் பல்வேறு சத்துக்கள் (Health Benefits) ஒளிந்துக் கொண்டிருக்கிறது.

ALSO READ | கஞ்சாவில இத்தனை நல்ல விஷயம் இருக்கா?

Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். இது எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. தினமும் எள் சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது, ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கிறது.

அதோடு, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கும் சத்துக்களைக் கொண்டது எள். மூன்று விதமான நிறங்களில் எள்கள் இருந்தாலும், கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறது. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று எள் சொல்கிறது. 

எள்ளில் இரும்பு சத்து, வைட்டமின்  A மற்றும் B நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஆனால், அமிர்தமே நஞ்சாகும் என்பதுபோல, அதிக அளவு எள் சாப்பிடக்கூடாது. தினமும் அரை தேக்கரண்டி அளவு எள் மட்டுமே ஒருவருக்கு போதுமானது. 

நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

READ ALSO | 2 வாரங்களில் எடையை 6 கிலோ குறைக்க சூப்பர் Clamps Device

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News