ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை கொண்ட பேரிக்காய்... அலட்சியம் செய்யாதீங்க..!

Health Benefits of Pear: ஆப்பிளுக்கு நிகரான ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பேரிக்காயின் நன்மைகளை எடுத்துரைப்பது என்றால் ஒரு பட்டியலே போடலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2024, 04:19 PM IST
  • பொதுவாகவே பழங்கள் நமது ஆரோக்கிய நலனுக்கு மிகவும் அத்தியாவசியமானது.
  • ஆப்பிள் பழத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரிக்காய்க்கு கொடுப்பதில்லை.
  • காய்கறிகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு பழங்களும் முக்கியம்.
ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை கொண்ட பேரிக்காய்... அலட்சியம் செய்யாதீங்க..! title=

Health Benefits of Pear: பொதுவாகவே பழங்கள் நமது ஆரோக்கிய நலனுக்கு மிகவும் அத்தியாவசியமானது. பல்வேறு ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் பழங்கள், தினமும் நமது டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் பழத்தை தவிர்க்கக்கூடாது. காய்கறிகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு பழங்களும் முக்கியம்.

நம்மில் பலர் ஆப்பிள் பழத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரிக்காய்க்கு கொடுப்பதில்லை. ஆப்பிளை விட குறைந்த விலை கொண்ட பேரிக்காய், ஆப்பிளுக்கு நிகரான ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பேரிக்காயின் ஆரோக்கிய நன்மைகளை (Health Tips) எடுத்துரைப்பது என்றால் ஒரு பட்டியலே போடலாம்.

பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1. பேரிக்காயில், பொட்டாசியம், வைட்டமின் சி கே ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்து உதவுகிறது.

2. கரையும் நார்ச்சத்து நிறைந்த பழமான பேரிக்காய் கெட்ட கொழுப்பை கரைத்து கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயத்தை பெரிதும் குறைக்கலாம்.

3. பேரிக்காய் மிக குறைந்த கலோரி அளவு கொண்டது என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பல பிரசாதமாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

4. பேரிக்காய் நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பான பழங்களில் ஒன்று. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

5. மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண்கள் போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்

6. புதிய செல்களை உருவாக்கும் ஆற்றல் பெற்ற பேரிக்காய் உடலில் உள்ள நோய்கிருமிகளையும் கட்டுப்படுத்துகிறது.

7. கர்ப்பிணிகள் பேரிக்காய் உண்பதால் கருவில் வரும் வளரும் குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

8. பாலூட்டும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் மிகவும் நல்லது. அதிக பால் சுரக்க பேரிக்காய் உதவும்.

9. சிறுநீரகத்தின் நச்சுக்களை நீக்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்க பேரிக்காய் உதவுகிறது

10. பேரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். புற்றுநோய் இதய நோய்களை நீக்கும் ஆற்றலை கொடுப்பது பேரிக்காயின் தோல்கள்.

11. பேரிக்காயில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பற்கள் எலும்புகள் இதனால் வலுப்பெறும்.

12. பேரிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News