புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 9 மருந்துகளின் விலை 87% குறைப்பு!

புற்றுநோய்க்கு வழங்கப்படும் 9 முக்கிய மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது!!

Last Updated : May 19, 2019, 02:17 PM IST
புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 9 மருந்துகளின் விலை 87% குறைப்பு! title=

புற்றுநோய்க்கு வழங்கப்படும் 9 முக்கிய மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது!!

மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி விலைக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சில்லரை மருந்து விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பவர்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவால் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மாதந்தோறும் புற்றுநோய் சிகிச்சைக்காக பெரும் தொகையை செலவிட்டு வரும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் மிகுந்த பயன் அடைவர்.

முன்பு 22 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்த பெமட்ரெக்சட் 500 மில்லிகிராம் ஊசி மருந்து இனி 2 ஆயிரத்து 800 ரூபாய்க்கே கிடைக்கும். 100 மில்லிகிராம் ஊசி மருந்து 800 ரூபாய்க்கு விற்பனையாகும் இதே போன்று 10 மாத்திரைகள் கொண்ட 100 மில்லிகிராம் எர்லோட்டினிப் முன்பு 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது அதன் விலை ஆயிரத்து 840 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

 

Trending News