கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மக்களுக்கு கடுமையான ஆபத்தின் அறிகுறியாக மாறி வருகிறது. இதனால், மக்களுக்கு மாரடைப்பு, நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், பார்கின்சன் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், செல்களை வலிமையாக்குவதற்கும் கொலஸ்ட்ரால் தேவை என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நமது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் ஒரு கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகை கொலஸ்ட்ரால் உள்ளது. கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒட்டும் பொருளாகும். இது இரத்த நாளங்களில் படிகிறது. இதனால், உடலுக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதில் தடை ஏற்பட்டு, எந்த நேரத்திலும் மாரடைப்பு வரலாம் என்ற ஆபத்தான் சூழல் ஏற்படுகிறது.
இந்த காரணங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடல் எடை அதிகரிப்பது, மது அருந்துவது, புகைபிடிப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது போன்றவை இதில் அடங்கும். ஆனால் தங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் மக்கள் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன!
நோயின் இந்த அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அறிகுறிகளின் அளவு அதிகரிப்பது பொதுவாக தெரியாது என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏதோ ஒரு பெரிய நோயின் பிடியில் சிக்கி, அதற்கான பரிசோதனை செய்துகொள்ளும்போதுதான் கொலஸ்ட்ரால் அதிகரித்ததால் இந்த நோய் ஏற்பட்டது என்பது பலருக்கு தெரிய வருகிறது என்பது நிபுணர்களின் கருத்து.
ஆகையால், நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது தெரியும் அறிகுறிகள் என்ன என்பதை அறிந்து, அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது மிக அவசியமாகும். சில குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த அறிகுறிகளில் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, அதிக சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், உயர் இரத்த அழுத்தம், குமட்டல், உடலில் உணர்வின்மை ஆகிய அறிகுறிகள் அடங்கும்.
கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் தென்பட்டால் இதை செய்ய வேண்டும்
- உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த சோதனையின் மூலம் தான் உங்கள் உடல் சரியாக வேலை செய்கிறதா, இல்லையா என்பது தெரியவரும்.
- 11 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்புச் சத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- குறிப்பாக 45 முதல் 65 வயதுடைய ஆண்களும், 55 முதல் 64 வயதுடைய பெண்களும் 2 வருடங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டால், மருத்துவர் பரிந்துரைத்தபடி உடனடியாக சிகிச்சையைத் தொடங்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காபி குடித்தால் ரத்த சர்க்கரை அளவு உயருமா? உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ