உடல் எடை கன்னாபின்னானு அதிகரிக்குதா? உணவு மட்டுமில்லை, இவையும் காரணமாக இருக்கலாம்

Overweight and Obesity: வயது ஏற ஏற, சரியான முறையில் எடை அதிகரிப்பது சரியே. ஆனால் உடல் எடை அதிகமாக அதிகரித்தால் அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பல விளைவுகள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 06:40 PM IST
  • இரத்த அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
  • உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எப்போதும் தங்கள் எடையைக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உடல் எடை கன்னாபின்னானு அதிகரிக்குதா? உணவு மட்டுமில்லை, இவையும் காரணமாக இருக்கலாம் title=

அதிக எடை மற்றும் உடல் பருமனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்: ஒருவருக்கு விரைவாக உடல் எடையை குறைவது மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பதும் உடல்நலம் தொடர்பான பிரச்சனையாகும். இப்போதெல்லாம், பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பு பிரச்சினையால் போராடுகிறார்கள். அதிகரித்த எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்த்து, விலையுயர்ந்த டயட் முறைகளையும் பின்பற்றுகிறார்கள். வயது ஏற ஏற, சரியான முறையில் எடை அதிகரிப்பது சரியே. ஆனால் உடல் எடை அதிகமாக அதிகரித்தால் அது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பல விளைவுகள் ஏற்படும்.

சில நேரங்களில் தவறான உணவுப் பழக்கம் எடை அதிகரிப்பதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் ஏதேனும் ஒரு நோயாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் சில நோய்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

டைப் 2 நீரிழிவு நோயால் எடை அதிகரிப்பு

உடலில் இரத்த சர்க்கரை அளவு சரியாக இல்லாவிட்டால், எடை இழப்பு அல்லது அதிகரிப்பு கூட ஏற்படலாம்.  உடலில் இன்சுலின் தாக்கம் இருக்கும்போது, ​​நமக்கு நீரிழிவு நோய் வருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 10 பேரில் 8 பேர் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிக எடை கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் வரலாம். உங்களுக்கு நீரிழிவு நோயின் மரபணு வரலாறு இருந்தால், எடையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது அவசியமாகும். 

உயர் இரத்த அழுத்தம் காரணமாக எடை அதிகரிப்பு

இரத்த அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எப்போதும் தங்கள் எடையைக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தமனிகளில் கொழுப்பு படிந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும். ரத்த அழுத்தம் சரியாக இல்லாவிட்டால் மாரடைப்பும் ஏற்படும். உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? கொழுப்பை கரைக்கணுமா? இந்த மேஜிக் காபி குடித்தால் போதும்

தைராய்டும் எடையை அதிகரிக்கிறது

தைராய்டு நோயாளிகள் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. உடல் எடையில் சிறிது மாற்றம் ஏற்பட்டால், தைராய்டுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தைராய்டு என்பது ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு சுரப்பி. தைராய்டு பாதிக்கப்படும் போது, ​​உடல் எடை தொடர்பான பிரச்சனைகள் உட்பட பல மாற்றங்கள் உடலில் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News