உணவில் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டு, புரதம் என மூன்று முக்கிய மக்ரோநியூட்ரியண்ட்களில் ஒன்றாகும். நூற்றுக்கணக்கான பொருட்கள், சப்ளிமெண்ட்ஸ் முதல் எனர்ஜி பார்கள் என உங்கள் புரதத்தை சரிசெய்வதற்கு உதவும். புரத உட்கொள்ளலை அதிகரிப்பதன் அடிப்படையில் முழுமையான உணவு முறைகளும் உள்ளன. உடல் ஆரோக்கியமாக இருக்கவும், சரியாக செயல்படவும் புரதம் தேவை.
அதிகப்படியான புரோட்டீன் பவுடரை உட்கொள்வது பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும், எனவே, தேவையில்லாமல் புரத சப்ளிமெண்டாக புரோட்டீன் பவுடரை சாப்பிடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள். அதிகப்படியான புரோட்டீன் பவுடரை உட்கொள்வது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதன் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
புரோட்டீன் பவுடர் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
ஜிம்மிற்குச் செல்பவர்கள் தசை வளர்ச்சிக்கும் வலிமைக்கும் புரோட்டீன் பவுடரை அடிக்கடி உட்கொள்கிறார்கள். புரோட்டீன் உடலுக்கு அதிக நன்மை பயக்கும், ஆனால் அதிகப்படியான புரோட்டீன் பவுடரை உட்கொள்வது உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும் என்பதால், உடலை கட்டமைக்க அதிக புரதத்தை உட்கொள்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம்
வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை அதிகரிக்கும் புரோட்டீன் பவுடர்
லாக்டோஸ் ஒவ்வாமை சிலருக்கு உள்ளது. அவர்கள், அதிக புரதத்தை உட்கொண்டால், அது குடல் பிரச்சனைகளை அதிகரிக்கும். இதில் உள்ள அம்சங்கள் வயிற்றில் வாயு மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும்
புரோட்டீன் பவுடரை அதிகமாக உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். புரோட்டீன் பவுடரில் ஐசோஃப்ளேவோன்கள் போன்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன, இவை உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும். இது ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகளை பாதிக்கலாம். எனவே, அதிக புரோட்டீன் பவுடரை உட்கொள்ள வேண்டாம்.
மேலும் படிக்க | Health Alert: 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இந்த கேள்வி உங்களுக்கும் இருக்கா? எச்சரிக்கை!
புரோட்டீன் பவுடர் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்
அதிக அளவு புரோட்டீன் பவுடரை உட்கொள்வது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். புரதத்திற்கான சப்ளிமெண்ட்கள், இரத்தத்தில் அசாதாரண அளவிலான pH ஏற்படுத்துகிறது, இது யூரிக் அமில சுரப்பை அதிகரிக்கலாம். யூரிக் அமிலம் அதிகரித்தால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படலாம்.
வயிற்று உபாதை அதிகரிக்கும்
அதிகப்படியான புரோட்டீன் பவுடரை உட்கொள்வது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். உண்மையில், புரத தூளில் லாக்டோஸ் உள்ளது, பால் அல்லது பால் பொருட்களில் காணப்படும் லாக்டோஸ் என்பது, அளவுக்கு அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, புரோட்டீன் பவுடரை தேவைக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது நோய்களை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
சரும பாதிப்பு
அதிகப்படியான புரோட்டீன் பவுடரை உட்கொள்வது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் புரத பவுடர், உங்கள் சருமத்தையும் பாதிக்கலாம். அதிக புரதத்தை உட்கொள்வதால் முகப்பரு மற்றும் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | மாரடைப்பு பக்கவாதத்தை தடுக்க சிம்பிள் வழி! இரத்த அடர்த்தியை பராமரிக்கும் உணவுகள்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ