Beetroot Juice For High BP: மெல்ல கொல்லும் விஷமான BP-ஐ நிர்மூலமாக்கும் பீட்ரூட் ஜூஸ் !

High BP Home Remedies: மெல்லக் கொல்லும் விஷமான உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் எதையும் பொதுவாக காட்டுவதில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2023, 05:12 PM IST
  • உயர் இரத்த அழுத்தம் மெல்லக் கொல்லும் ஒரு விஷம்.
  • உயர் இரத்த அழுத்த நோயாளிகள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
  • பீட்ரூட்டில் (NO3) டயட்டரி நைட்ரேட்டுகள் நிரம்பியுள்ளன.
Beetroot Juice For High BP: மெல்ல கொல்லும் விஷமான BP-ஐ  நிர்மூலமாக்கும் பீட்ரூட் ஜூஸ் ! title=

உயர் இரத்த அழுத்தம், hypertension என்றும் அழைக்கப்படுகிறது, இது உங்கள் இரத்த நாளங்களில் அழுத்தம்  (140/90 mmHg அல்லது அதற்கு மேல்) அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நிலை. இந்த அழுத்தம் தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தம் தள்ளப்படும் சக்தியைக் குறிக்கிறது. நீடித்த உயர் இரத்த அழுத்தம் இதயத்திற்கு கடுமையான சேதம் உட்பட உடலுக்குள் அழிவை ஏற்படுத்தும். இன்று, இந்த கட்டுரையில், உயர் இரத்த அழுத்தத்தை வீட்டிலேயே எவ்வாறு எளிதாக நிர்வகிக்க உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.

உயர் இரத்த அழுத்தம்: மெல்லக் கொல்லும் விஷம்

உயர் இரத்த அழுத்தம் அனைத்து வயதினரையும் தாக்கும் ஒரு உடல் நல பிரச்சனை ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகம் முழுவதிலுமிருந்து 30 - 79 வயதுடைய 1.3 பில்லியன் பெரியவர்கள் தற்போது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், வயது வந்தவர்களில் சுமார் 46 சதவீதம் பேருக்கு இந்த நிலை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள். மெல்லக் கொல்லும் விஷமான உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் எதையும் பொதுவாக காட்டுவதில்லை. எனவே தொடர் கண்காணிப்பின் மூலமே கண்டறிய இயலும். இருப்பினும், இரத்த அழுத்தம் அதிகரிப்பதைப் பற்றி உங்களுக்குச் தெரிவிக்க கூடிய சில அறிகுறிகள் உள்ளன:

1. கடுமையான தலைவலி

2. தொடர்ந்து நெஞ்சு வலி

3. மிகுந்த சோர்வு மற்றும் மயக்கம்

4. மூச்சுத் திணறல்

5. குமட்டல் அல்லது வாந்தி

6. மங்கலான பார்வை

7. கவலை மற்றும் பதற்றம்.

மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!

பீட்ரூட் சாறு உண்மையில் இரத்த அழுத்தத்தை குறைக்குமா?

 உயர் இரத்த அழுத்த நோயாளிகள் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க சில காணக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். "உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க சரியான மருந்துகளுடன், வாழ்க்கை முறை மாற்றங்களும் முக்கியம். அதில் ஒரு முக்கிய நிலைஉங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவதும், அதிக விழிப்புணர்வுடன் சாப்பிடுவதும் ஆகும்," என்கிறார் பெல்லி வ்யூ மருத்துவமனைகளின் பொது மருத்துவர் டாக்டர் திமான் பாசு.

இன்று, இந்த கட்டுரையில், பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் என்பதை அறியலாம். டாக்டர் பாசு இது குறித்து கூறுகையில், பீட்ரூட்டில் (NO3) டயட்டரி நைட்ரேட்டுகள் நிரம்பியுள்ளன. இது இரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பீட்ரூட் உயர் இரத்த அழுத்தத்திற்கான சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆய்வுகளின்படி, உணவில் உள்ள நைட்ரேட், உயிரியல் ரீதியாக செயல்படும் நைட்ரைட் (NO2) மற்றும் நைட்ரிக் ஆக்சைடு (NO) ஆக மாற்றப்படுகிறது. நைட்ரிக் ஆக்சைடு உயர் இரத்த அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிக்க உதவுகிறது? நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களின் தளர்வை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.

தினமும் பீட்ரூட் ஜூஸ் எவ்வளவு குடிக்க வேண்டும்?

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் (BHF) நிதியளித்த 2015 ஆம் ஆண்டு ஆராய்ச்சியின் படி, ஒரு வயது வந்தவர் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க தினமும் 250 மில்லி பீட்ரூட் சாறு குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

சாதாரண இரத்த அழுத்த அளவீடு என்றால் என்ன?

சாதாரண இரத்த அழுத்தம் தனிநபர்களிடையே மாறுபடலாம், ஆனால் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் 120 மிமீ எச்ஜி சிஸ்டாலிக் மற்றும் 80 க்கும் குறைவான இரத்த அழுத்தத்தை பரிந்துரைக்கிறது. உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க, உங்கள் உடல்நலம் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். நீரிழிவு மற்றும் அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும்;  உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கவும்; ஆரோக்கியமாக சாப்பிடவும், அதிக எடை அதிகரிப்பதைத் தவிர்க்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும், புகைபிடிப்பதை விட்டுவிடவும் மற்றும் அதிக மது அருந்துவதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News