ராய்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் நடைப்பெற்ற தூப்பாக்கிசூட்டில் 14 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்!
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மாவில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும், நக்ஸலைட் கும்பலுக்கும் இடையே நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்பூரில் இருந்து 500 கிமி தொலைவில், தெற்கு சுக்மாவில் இருக்கும் வனப்பகுதியில் இன்று காலை இந்த துப்பாக்கிசூடு நடைப்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூடு நடைப்பெற்ற இடத்தில் இருந்து இதுவரை 14 நக்ஸலைட்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக டெப்பிட்டி இன்ஸ்பெக்டர் ஜென்ரல் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
Security forces in Chhattisgarh killed at least 14 Maoists in an encounter near Sukma's Konta and Golapalli police station limits.
Read @ANI Story | https://t.co/4NIIzwN4rF pic.twitter.com/Kmx01DARDd
— ANI Digital (@ani_digital) August 6, 2018
மேலும் பலரது சடலங்கள் கிடைக்கலாம் என தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதத்தின் முற்பகுதியில், சத்தீஷ்பகுதியில் இருக்கும் மாவோயீஸ்டுகள் தங்கள் படையில் இருந்து 247 வீரர்களை கடந்த 2 ஆண்டுகளில் இழந்துள்ளதாக சுற்றரிக்கை மூலம் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து டிரைக்டர் ஜெனரல் தெரிவிக்கையில்... கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட 500 துப்பாக்கிச்சூட்டில் 208 தீவிரவாதிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.