நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று: இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வரை சந்தித்தார்!!

கொரோனாவால் விதிக்கப்பட்ட லாக்டௌனுக்குப் பிறகு முதன் முறையாக, நவம்பர் 9 ஆம் தேதி, அவர் கோரட்டாலா சிவாவின் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருந்ததார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2020, 01:23 PM IST
  • தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி கொனிதேலா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை சந்தித்தார்.
  • தெலுங்கானாவின் மீட்பு விகிதம் 91.79 சதவீதமாகவும், நாட்டின் மீட்பு விகிதம் 92.5 சதவீதமாகவும் உள்ளது.
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று: இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வரை சந்தித்தார்!! title=

ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி கொனிதேலா கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி (Chiranjeevi) தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தினார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை சந்தித்தார்.

Image

கொரோனாவால் விதிக்கப்பட்ட லாக்டௌனுக்குப் பிறகு முதன் முறையாக, நவம்பர் 9 ஆம் தேதி, அவர் கோரட்டாலா சிவாவின் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருந்ததார். இந்த வேளையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில், சமீபத்தில் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வாலும் நடிக்கிறார். காஜல் தற்போது மாலத்தீவுகளில் விடுமுறையில் இருக்கிறார்.

ALSO READ: உச்சியில் COVID-ன் மூன்றாவது அலை, ஒரே நாளில் 7745 பேர் பாதிப்பு: பீதியில் மக்கள்!!

சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியை நிறுவியதோடு, மன்மோகன் சிங் (Manmohan Singh) தலைமையிலான யுபிஏ UPA-2 அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். 65 வயதான சிரஞ்சீவி தனது ஹைதராபாத் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

சிரஞ்சீவி தனது ட்வீட்டில், “’ஆச்சார்யா’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஒரு நெறிமுறையாக COVID க்கான ஒரு பரிசோதனையை செய்துகொண்டேன். எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது அறிகுறியில்லாமல் இருக்கிறேன் மற்றும் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னைச் சந்தித்த அனைவரையும் கோவிட் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் எனது மீட்பு குறித்து உங்களுக்கு தகவல் வழங்குவேன்” என்று எழுதியுள்ளார்.

சமீபத்திய தரவுகளின்படி, தெலுங்கானாவில் 857 பேர் புதிதாக COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று 2,51,188 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 1,381 ஆக அதிகரித்துள்ளது.

தெலுங்கானாவில் (Telangana) இறப்பு விகிதம் 0.54 சதவீதமாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவின் மீட்பு விகிதம் 91.79 சதவீதமாகவும், நாட்டின் மீட்பு விகிதம் 92.5 சதவீதமாகவும் உள்ளது.

ALSO READ: கொரோனாவை தடுப்பதில் BCG தடுப்பூசி பயனளிக்கும் என்கிறது புதிய ஆய்வு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News