16,000 அடி உயரத்தில் Appendix Operation: கடுமையான சூழலில் இந்திய Army Doctors-ன் சாதனை!!

அறுவைசிகிச்சை செய்வதில் மருத்துவர்கள் பல சவால்களை சந்தித்த போதிலும், அறுவை சிகிச்சையை அவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2020, 10:30 AM IST
  • 16,000 அடி உயரத்தில் ராணுவ வீரருக்கு நடந்த அபெண்டிக்ஸ் ஆபரேஷன்.
  • இந்த அறுவை சிகிச்சை அக்டோபர் 28 அன்று நடத்தப்பட்டது.
  • ராணுவ மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தனர்.
16,000 அடி உயரத்தில் Appendix Operation: கடுமையான சூழலில் இந்திய Army Doctors-ன் சாதனை!! title=

இந்தியா சீனா எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  எல்லைப் பகுதியான LAC-ல் அதிக அளவிலான படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடுமையான குளிரில் எல்லையில் படைகள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில், இராணுவ மருத்துவர்கள் (Army Doctors) 16,000 அடி உயரத்தில் ஒரு பெரிய சாதனையை செய்துள்ளனர். கிழக்கு லடாக்கில் உள்ள ஃபார்வர்ட் அறுவை சிகிச்சை மையத்தில், ராணுவ மருத்துவர்கள், ஒரு வீரருக்கு அறுவை சிகிச்சை செய்து அபெண்டிக்சை (Appendix) அகற்றியுள்ளனர்.

ஒரு லெப்டினன்ட் கர்ணல், ஒரு மேஜர் மற்றும் ஒரு கேப்டன் உட்பட மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ஒரு சிப்பாய்க்கு இந்த அறுவை சிகிச்சையை செய்தனர். வானிலை காரணமாக அந்த வீரரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாததால், மூவரும் இணைந்து அந்த இடத்திலேயே வீரருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

"ஃபீல்ட் ஹாஸ்பிடலில் உள்ள சர்ஜிகல் டீம் ஒரு அவசரநிலை அறுவை சிகிச்சையை செய்து ஒரு வீரரின் உடலிலிருந்து அபெண்டிக்சை அகற்றினர். 16,000 அடி உயரத்தில் மிகவும் குளிரான சூழலில், மிகக் குறைந்த வெப்பநிலைகளில் ஃபார்வர்ட் அறுவை சிகிச்சை மையத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அறுவைசிகிச்சை செய்வதில் மருத்துவர்கள் பல சவால்களை சந்தித்த போதிலும், அறுவை சிகிச்சையை அவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். நோயாளி இப்போது சீராக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Indo-Pacific: பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான போராட்டத்தை, முன்னெடுக்கும் இந்தியா

இந்த அறுவை சிகிச்சை அக்டோபர் 28 அன்று நடத்தப்பட்டது.

ஃபார்வர்ட் பகுதிகளில் ராணுவ மருத்துவர்கள் நடத்தியுள்ள சில வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும். இந்திய இராணுவத்தின் (Indian Army) கள மருத்துவமனைகள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. LAC-ல் கடுமையான பனிப்பொழிவு நிலைமைகளில் ஈடுபடுத்தப்படும் துருப்புக்கள் எதிர்கொள்ளும் தீவிர குளிர்காலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சையை இவை அளித்து வருகின்றன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே (Manoj Mukund Narvane), சீனர்களுடன் ஏற்கனவே உள்ள பதட்டமான சூழலுக்கு இடையில், குளிர்காலத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு துருப்புக்களுக்கு முறையான ஆடை மற்றும் வாழ்விடங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஃபார்வர்ட் இடங்களுக்கு பல பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

குளிர்காலத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிரிகளை விட பலம் அதிகமாகிவிடுகிறது. ஏனெனில் கடந்த காலங்களிலும் சியாச்சின் மற்றும் அருகிலுள்ள கார்கில்-டிராஸ் செக்டர் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய துருப்புக்களுக்கு கடுமையான குளிர்கால சூழ்நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள அனுபவம் உள்ளன.

ALSO READ: La Nina தாக்கம் காரணமாக இந்தியாவில் இந்த வருடம் குளிர் கடுமையாக இருக்கும் : IMD

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News