Arvind Kejriwal Speech After Release: 18ஆவது மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறவித்த நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 50 நாள்களுக்கு பின் தொடர் போராடத்தின் விளைவாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று நான்கு நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது. கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அதாவது ஜூன் 2ஆம் தேதி அன்று அவரை சரண் அடையும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் கூறிய முக்கிய கருத்து
அவருக்கு ஜாமீன் வழங்கியபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில்,"அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வர். மேலும், ஒரு தேசிய கட்சி ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை. அவரால் சமூகத்திற்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பயங்கர இருட்டு... மைக் இல்லை - வைரலாகும் பிரியங்கா காந்தியின் அதிரடி பிரச்சாரம்!
அதை தொடர்ந்து, இன்று மாலை அவர் திஹார் சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் நூற்றுக்கணக்கில் கூடியிருந்த ஆம் ஆத்மி தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.
ஹனுமானுக்கும் நீதிபதிகளுக்கும் நன்றி
அப்போது விடுதலையானதற்கு கடவுளுக்கும், தனக்கு ஜாமீன் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், நாளை டெல்லியில் உள்ள அனுமான் கோயிலில் காலை 11 மணிக்கு தரிசனம் செய்ய உள்ளதாகவும், மதியம் 1 மணிக்கு ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற உள்ளதாக கூறினார்.
50 दिनों के बाद तिहाड़ जेल से बाहर आए CM अरविंद केजरीवाल। https://t.co/wdUhvBFCxJ
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 10, 2024
தொண்டர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,"சீக்கிரம் வெளியே வந்துவிடுவேன் என சொன்னேன் அல்லவா... இதோ நான் வந்துவிட்டேன். ஹனுமானுக்கு முதலில் நன்றி சொல்ல விரும்புகிறேன், அவருடைய அருளால் இன்று நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன். தங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் எனக்கு அனுப்பிய நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும், அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்துணர்ச்சி பெற்ற இந்தியா கூட்டணி
சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிராக நான் முழு பலத்துடன் போராடி வருகிறேன். ஆனால் 140 கோடி இந்தியர்களும் போராட வேண்டும். அதேபோல், நான் நாளை காலை 11 மணிக்கு கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று இறைவனின் அருளை பெற உள்ளேன். மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடக்கும்" என்றார்.
மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது வரை 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் மே 26ஆம் தேதி அதாவது 6ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது தேர்தல் நடைபெறும். அரவிந்த் கெஜ்ரிவாலின் தற்போதைய விடுதலை அடுத்து இந்தியா கூட்டணி புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. அவர் டெல்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ