ஹரியானா: கர்னாலில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.
விபத்து நடந்த தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்த்திற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தனர். விபத்து பற்றி பேசிய கர்னல் காவல்துறை கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா, தொழிற்சாலையில் (Factory) இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தெரிவித்தார். காயமடைந்த 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணங்களை அறிய விசாரணை நடந்து வருகிறது.
Also Read | TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
"இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் தகவல் அளித்துள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை நடந்து வருகிறது" என்று போலீசார் (Police) தெரிவித்தனர்".
Haryana: Three persons died, one injured in blast at a cracker factory in Karnal
"We have informed the family members of the deceased. Injured is being treated in the hospital. Investigation is underway," said police (24.02.2021) pic.twitter.com/4dA99CYv9E
— ANI (@ANI) February 25, 2021
நேற்று இரவு 9.30 மணியளவில் கோக்ரிபூர் சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது இந்த விபத்து ( Accident) நிகழ்ந்தது. இந்த விபத்தினால் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காண முடியவில்லை மற்றும் காயமடைந்தவர்கள் சிவம் குமார் (28), விஜய் பால் (22), விஜய் குமார் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.
Also Read | போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR