தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்

Chitra Ramakrishna: தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2022, 03:37 PM IST
  • சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன்.
  • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
  • தேசிய பங்குச் சந்தையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேசிய பங்குச்சந்தை  ஊழல் வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் title=

தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 6ஆம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக இருந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2013 இல் முன்னாள் சிஇஓ ரவி நரேனுக்குப் பிறகு பொறுப்பேற்ற சித்ரா ராமகிருஷ்ணா, சுப்பிரமணியனை தனது ஆலோசகராக நியமித்தார். பின்னர் அவர் குழு இயக்க அதிகாரியாக (GOO) உயர்த்தப்பட்டார்.

மேலும் படிக்க | என்எஸ்இ மோசடி வழக்கு: முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிஷ்ணா கைது, விவரங்கள் இதோ

சுப்ரமணியனின் சர்ச்சைக்குரிய நியமனம் மற்றும் அவரது அடுத்தடுத்த பதவி உயர்வு ஆகியவற்றிலும், முக்கியமான முடிவுகளிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சித்ரா வழிநடத்தப்பட்டார். அந்த நபர் இமயமலையில் வசிப்பதாக சித்ரா ராமகிருஷ்ணா கூறினார். செபி-ஆணையிடப்பட்ட தணிக்கையின் போது சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் பற்றிய ஆய்வு இந்த தகவல்களைக் காட்டுகிறது.

பல வித குற்றச்சாட்டுகளுக்காக, சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், என்எஸ், என்எஸ்இ முன்னாள் எம்டியும் சிஇஓவுமான ரவி நரேன் சுப்ரமணியனுக்கு தலா ரூ.2 கோடியும், தலைமை ஒழுங்குமுறை அதிகாரி மற்றும் இணக்க அதிகாரியாக இருந்த வி ஆர் நரசிம்மனுக்கு ரூ.6 லட்சமும் செபி அபராதமாக விதித்தது.

விசாரணையின் போது சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத சாமியார் ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, இந்த ஆன்மீக குருவின் விருப்பப்படி மூத்த அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சித்ரா நியமித்திருந்தார். என்எஸ்இ-யில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, ஆனந்த் சுப்ரமணியம் ஒரு சாமானிய மனிதராக இருந்தார்.

மேலும் படிக்க | பங்குச்சந்தை மோசடி...ஆனந்த் சுப்ரமணியன் ஜாமீன் மனு தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News