இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அக்டோபர் மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ராம் ஜனம்பூமி-பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பை குறித்து விவாதிக்க போதுமான நேரம் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 18 அன்று, தலைமை நீதிபதி துபாய்க்கு விஜயம் செய்யவிருந்தார், அங்கிருந்து கெய்ரோ, பிரேசில் மற்றும் நியூயார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர் அக்டோபர் 31-ஆம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தார். இருப்பினும், சமீபத்திய தகவல்களின்படி, பல நாடுகளின் பயணம் இப்போது சாத்தியமற்றது என கூறி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய முடிவுசெய்துள்ளார்.
அயோத்தி நில தகராறு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமற்விற்கு ரஞ்சன் கோகோய் தலைமை தாங்கினார். இந்த வழக்கில் 40 நாள் விசாரணைக்கு பின்னர் வியாழக்கிழமை அரசியலமைப்பு அமர்வு தனது தீர்ப்பை ஒதுக்கியது.
நவம்பர் 17-15 தேதிகளில் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதால், நவம்பர் 4-15 தேதிகளுக்கு இடையில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக செப்டம்பர் மாதம், அக்டோபர் 18-க்குள் அனைத்து வாதங்களையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு கோகோய் இந்து மற்றும் முஸ்லீம் வாதி, பிரதிவாதிகளை கேட்டுக் கொண்டார். பின்னர் இறுதி தேதியை அக்டோபர் 17-க்கு மாற்றியமைத்தது.
அயோத்தி வழக்கில் அன்றாட நடவடிக்கைகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மத்தியஸ்த நடவடிக்கைகள் சர்ச்சைக்கு இணக்கமான தீர்வைக் காணத் தவறியதைத் தொடர்ந்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சிறு குறிப்பு: இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் மற்ற நான்கு நீதிபதிகள், நீதிபதிகள் ஷரத் அரவிந்த் போப்டே, அசோக் பூஷண், டி ஒய் சந்திரசூட் மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர்.