நாடும் முழுவதும் அடுத்து மாதம் முதல் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயுத்தமாகி வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 7 ஆம் தேதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ஏற்கனவே ஐந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியா நிலையில், அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆறாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
இந்த 6_வது வேட்பாளர்கள் பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து ஏழு, கேரளாவில் இருந்து 2 என மொத்தம் 9 வேட்பாளர்களை கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் விவரம் பின்வருமாறு:-
1. கேரளா - ஆழப்புழா - திருமதி ஷானிமோல் உஸ்மான்
2. கேரளா - அட்டிங்கல் - அடூர் பிரகாஷ்
3. மகாராஷ்டிரா - நந்தூர்பார் - கே.சி.பாடவி
4. மகாராஷ்டிரா - துலே - குணால் ரோஹிதாஸ் பட்டீல்
5. மகாராஷ்டிரா - வார்தா - சாருலதா கஜாசிங்
6. மகாராஷ்டிரா - யாவட்மால் வாசிம் - மாணிக்ராவ் தாக்கரே
7. மகாராஷ்டிரா - மும்பை தெற்கு - ஏக்நாத் கெய்க்வாட்
8. மகாராஷ்டிரா - சிரிதி - பெளசாஹிப் காம்ப்ளே
9. மகாராஷ்டிரா - ரத்னகிரி - நவின்சந்திரா பண்டிவடேகர்
The Congress Central Election Committee announces the sixth list of candidates for the ensuing elections to the Lok Sabha. pic.twitter.com/dYdx7V1AVt
— Congress (@INCIndia) March 19, 2019