புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் (Defence Minister) ராஜ்நாத் சிங் (Rajnath Singh) அவர்கள், இன்று, ஜம்மு செக்டரில் எல்லை சாலைகள் அமைப்பால் (BRO) கட்டப்பட்ட 6 புதிய பாலங்களை (Bridges) திறந்து வைப்பார் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 6 பாலங்களும் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சர், அக்னூர் செக்டரில் நான்கு பாலங்களையும் ஜம்மு-ராஜ்புரா பகுதியில் இரண்டு பாலங்களையும் திறந்து வைப்பார்.
கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மற்றும் உத்திராகண்டில், BRO மூலம் செய்யப்படும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மத்திய அரசு கூடுதலாக 1,91 கோடி ரூபாயை வழங்கியிருந்தது.
ALSO READ: NGT: புதிய தொழில் தொடங்கும்போது சுற்றுச்சூழல் விதிகளை புறக்கணித்தால் கடும் அபராதம்
ஜம்மு காஷ்மீரிலிருந்து 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, அங்கு பலவிதமான வளர்ச்சிப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகள் மற்றும் நலத் திட்டங்களின் பயன்களையும் இனி ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள மக்கள் பெற வழி பிறந்துள்ளது.