INX Media முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் அவர்களை வரும் செப்., 28-ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கடந்த 2006 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் ப.சிதம்பரம் அவர்களை இவ்வழக்கின் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
INX media case: Delhi High Court extends protection from arrest given to P Chidambaram till September 28. (file pic) pic.twitter.com/8kA9BnPaPt
— ANI (@ANI) August 1, 2018
இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், (இன்று) ஆகஸ்ட் 1-ஆம் தேதி, சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் ப.சிதம்பரம் அவர்களை வரும் செப்., 28-ஆம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!