2020 ஆம் ஆண்டில் தேசிய தலைநகர் தில்லியில் நடந்த கலவரங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தில்லி கலவரத்தில், வன்முறை திடீரென வெடிக்கவில்லை, அது ஒரு திட்டமிட்டப்பட்ட சதி என, தில்லி கலவரம் தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முகமது இப்ராகிமுக்கு ஜாமீன் வழங்க மறுத்த போது இவ்வாறு தெரிவித்தத.
தில்லி கலவரம் தொடர்பாக நீதிமன்றத்தில் சமபர்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் போராட்டக்காரர்களின் நடவடிக்கை இதனை தெளிவாக உணர்த்துகிறது என்று நீதிமன்றம் கூறியது. அரசின் வழக்கமான நடவடிக்கைகளையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்க கலவரங்கள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்பட்டன என நீதிமன்றம் கூறியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டது, நகரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏற்கனவே சதி திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கூறியது.
குற்றம் சாட்டப்பட்ட முகமது இப்ராகிமுக்கு ஜாமீன் மறுப்பு
டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முகமது இப்ராகிமின் ஜாமீன் மனுவை, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் தள்ளுபடி செய்தார். தனிநபர் சுதந்திரம் என்பது, நாகரீக சமூகத்தின் கட்டமைப்பை குலைக்க பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது. சிசிடிவி காட்சிகளில் இப்ராகிம், வாளால் அனைவரையும் மிரட்டுவது பதிவாகியிருந்தது.
ALSO READ | பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..!!
காவல்துறையினர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு
வடகிழக்கு டெல்லியில் சந்த் பாகில் நடந்த கலவரத்தின் போது காவல்துறையினர் மீதான வன்முறை தாக்குதலில் போது, ஹெட் கான்ஸ்டபிள் ரத்தன் லால் தலையில் தாக்கப்பட்டு இறந்தார். மற்றொரு அதிகாரி பலத்த காயமடைந்தார்.
மாறாத கலவரத்தின் வடுக்களை இன்னும் காணலாம்
வடகிழக்கு டெல்லியின் சந்த் பாக், கஜூரி காஸ், பாபர்பூர், ஜாஃப்ராபாத், சீலாம்பூர், மெயின் வசிராபாத் சாலை, கரவால் நகர், சிவ் விஹார் மற்றும் பிரம்மபுரி ஆகிய இடங்களில் அதிக வன்முறைகள் நடந்தன. இரு சமூகங்களுக்கிடையில் நடந்த கலவரத்தில், தீ வைத்தல், நாசவேலை செய்த தடயங்கள் இன்னும் உள்ளன. கலவரத்திற்குப் பிறகு, சிலர் அரசு மற்றும் அரசு சாராத உதவியுடன் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் சிலர் இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை.
ALSO READ | ₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR