கொரோனா வைரஸ் தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக பல பூஞ்சைகள் பூதாகாரமாய் கிளம்பி வருகின்றன. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சையைத் தொடர்ந்து இப்போது இந்தியாவில் ஒருவர் பச்சை பூஞ்சை (Green Fungus) இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரு நபருக்கு பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக அந்த நபர் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது அவருக்கு பச்சை பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்தூர் சுகாதாரத்துறை மேலாளர் அபூர்வா திவாரி கூறியுள்ளார். அவரது உடல் நிலை சரியாகாமல் தொடர்ந்து பிரச்சனை இருந்ததால், பல வித பரிசோதனைகள் அவருக்கு செய்யப்பட்டன. இறுதியாக, தற்போதைய நோயறிதல் பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் (Lungs) பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து அவர் குணமடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தூரில் அந்த நோயாளிக்கு பச்சை பூஞ்சை நோய் உறுதியான பிறகு, அவர் அடுத்த கட்ட சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ALSO READ | Green Fungus: இந்தியாவில் முதன்முதலாக ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டது
COVID-19 இலிருந்து மீண்ட நபர்களில் பச்சை பூஞ்சை தொற்றுநோய் ஏற்படுவது எவ்வளவு சாத்தியம் என்பது குறித்தும், இதன் அறிகுறிகள் மற்ற பூஞ்சைகளிலிருந்து வேறுபட்டு இருக்குமா என்பது குறித்தும் இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று மருத்துவமனை சார்பில் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
பச்சை பூஞ்சை நோய் தொற்றின் அறிகுறிகள்:
அஸ்பெர்கில்லோசிஸ் என்றும் அழைக்கப்படும் பச்சை பூஞ்சை, மூக்கு இரத்தப்போக்கு மற்றும் அதிக காய்ச்சல் ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகள் தவிர, பச்சை பூஞ்சை கடுமையான எடை இழப்பு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
டாக்டர் ரவி தோசி கூறுகையில், மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் இந்தூரிலிருந்து மும்பைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட நோயாளியில் காணப்பட்டன. டாக்டர் தோஷியின் கூற்றுப்படி, COVID-19 இலிருந்து மீண்ட நபர்களில் பச்சை பூஞ்சை தொற்றுநோயின் தன்மை மற்ற நோயாளிகளிடமிருந்து வேறுபட்டதா என்பது குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.
ALSO READ: COVID தடுப்பூசி பக்க விளைவால் ஒருவர் உயிர் இழப்பு: உறுதி செய்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR