இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்; போட்டி போடும் குஜராத், கர்நாடகா மாநிலங்கள்

டெஸ்லா நிறுவனம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் டெஸ்லா நிறுவனம் அதன் இந்திய தலைமையகத்தை பெங்களூரிவில் அமைக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2021, 02:36 PM IST
  • மஹாராஷ்டிரா அரசுடன் டெஸ்லா நடத்தும் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
  • டெஸ்லா நிர்வாகிகள் மும்பை பெருநகர மண்டலத்தில் மிக பெரிய சார்ஜிங் நிலையங்கள் தேவை என கோருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்; போட்டி போடும் குஜராத், கர்நாடகா மாநிலங்கள் title=

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா (Tesla) நிறுவனம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் டெஸ்லா நிறுவனம் அதன் இந்திய தலைமையகத்தை பெங்களூரிவில் அமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், டெஸ்லா நிறுவனத்திற்கு 1,000 ஏக்கர் நிலங்களை வழங்க குஜராத் அரசாங்கம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பெங்களூர் உள்பட மும்பை, டெல்லி என சில முக்கிய நகரங்களில் டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவவும் இந்த எலக்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

தங்கள் மாநிலத்திற்கு, அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவை (Tesla) தங்களது மாநிலத்திற்கு கொண்டுவர கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தொழிற்சாலையை கட்டமைப்பதற்கு தேவையான இடத்தை கொடுத்து டெஸ்லா நிறுவனத்தை கவர இந்த மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது, டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 1,000 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது என குஜராத் அரசாங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்  நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. குஜராத் (Gujarat), அதானி துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், முந்திரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில்  1,000 ஏக்கர்களை வழங்கப் போவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியில், அந்த குஜராத் அரசாங்க மூத்த நிர்வாகி, "டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலையை பெங்களூரில் அமைக்கலாமா அல்லது குஜராத்தில் அமைக்கலாம அஎன எதையும் தீர்மானிக்க வில்லை. குஜராத் மற்றும் கர்நாடக அரசாங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்" என அவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா,  கடந்த 2021 ஜனவரி 8 ஆம் தேதி தன்னை டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Tesla India Motors & Energy Private Limited) என பெங்களூரில் பதிவு செய்து கொண்டதன் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்தது. 

குஜராத் மட்டுமின்றி மஹாராஷ்டிரா அரசாங்கமும் டெஸ்லாவை தங்களது மாநிலத்தில் வர வேண்டும் என விரும்புகிறது. மஹாராஷ்டிரா அரசும் தங்களது மாநிலத்தில் டெஸ்லாவிற்கு நிலத்தை வழங்க தயாராக உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. 

ALSO READ | இந்தியா வருகிறது Elon Musk-ன் Tesla: Bengaluru-வில் துணை நிறுவனம் பதிவு

இருப்பினும் மஹாராஷ்டிரா அரசுடன்  டெஸ்லா நடத்தும்  பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஏனெனில் டெஸ்லா நிர்வாகிகள் மும்பை பெருநகர மண்டலத்தில் மிக பெரிய சார்ஜிங் நிலையங்கள் தேவை என கோருவதாக தகவல்கள் கூறுகின்றன.  கார்களை கப்பலில் இருந்து இறக்குமதி செய்ய ஏதுவாக ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சார்ஜிங் நிலையங்களை நிறுவ அனுமதியளிக்க டெஸ்லா மஹாராஷ்டிரா அரசை கோரி வருகிறது. 

இந்தியாவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் கூட்டணி வைத்துள்ள 27 விற்பனையாளர்களில் கிட்டத்தட்ட 20 பேர் மஹாராஷ்டிராவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Elon Musk: உலகின் No.1 பணக்காரரைப் பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள்!!

Trending News