கடந்த 10 ஆம் தேதி கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த 6E 779 என்ற இண்டிகோ விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற 6E 6505 என்ற இண்டிகோ விமானமும் கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த இரு இண்டிகோ விமானம் நேருக்கு நேர் மோதிக்கொள்ள இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
இந்த இரு இண்டிகோ விமானம் நேருக்கு நேர் வந்ததில், வெறும் 200 அடிகள் மட்டுமே இடைவெளி இருந்ததாகவும், விமான மோதல் தடுப்பு அலாரம் என்ற நவீன தொழில்நுட்பமான "டிசிஏஎஸ்" எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, விமான ஓட்டிகள் மோதலை தவிர்த்துள்ளனர். இதனால் ஏற்பட இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விமானங்களிலும் கிட்டத்தட்ட 300-க்கு மேற்ப்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.